[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை
  • BREAKING-NEWS சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை
  • BREAKING-NEWS சபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா

இந்தியாவிற்கு 253 இலக்கு - ‘அடேங்கப்பா’ ஆன்லைனில் 32 லட்சம் பேர் லைவ்!

indvsafg-asia-cup-2018-india-need-to-won-253-runs

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை போட்டியை ஒரே நேரத்தில் 32 லட்சம் பேர் இணையதளத்தில் பார்த்துள்ளனர். 

ஆசியக் கோப்பை 2018 தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 4 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தேர்வு பெற்றதால், ரோகித் ஷர்மா, புவனேஷ் குமார், பும்ரா, ஷிகர் தவான் மற்றும் சாஹல் ஆகியோருக்கு இன்றைய போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று தோனி கேப்டனாக அணியை வழி நடத்துகிறார். 

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் முகமத் 124 (116) ரன்களை குவித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். 6 விக்கெட்டிற்குப் பிறகு வந்த நபி 64 (56) ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த நஜிபுல்லா 20 (20),  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 252 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 253 என்ற இலக்கை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது. இந்தப் போட்டி ஸ்டார் சேனல் குரூப்பின் அதிகாரப்பூர்வ செயலியான ஹாட் ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பட்டது. இதனை ஒரே நேரத்தில் 32 லட்சம் பேர் பார்த்தனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close