[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு

'ரவி சாஸ்திரி போய் பின்னாடி நில்லுங்க' சவுரவ் கங்குலி காட்டம்

cricket-is-a-captain-s-game-coach-must-take-back-seat-ganguly

இந்திய அணி இப்போது ஆசியக் கோப்பை போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கும் தகுதிப் பெற்றுள்ளது. மேலும் இன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டமாகவும், ஆப்கானிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றித் தரும் ஆட்டமாகவே இருக்கும். மேலும் இன்றே மற்றொறு ஆட்டமும் நடைபெறவுள்ளது. இதில் நாளை பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெறும் இந்தியாவை இறுதிப் போட்டியில் சந்திக்கும்.

Read Also -> ‘தாய்ப்பால் வங்கிதான் என் குழந்தையை காப்பாத்துனது..!’ நெகிழும் ராஜலட்சுமி

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வரலாற்றை சொல்லும் 'A century is not Enough'என்ற புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. அப்போது கங்குலி பத்திரிக்கையாளர்களுடன் உரையாடினார். செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு கங்குலி காரசாரமாகவே பதிலளித்தார். இந்திய அணிக்கு கேப்டனாக கங்குலி இருந்தபோது பயிற்சியாளர் கிரக் சாப்பலுடன் ஏற்பட்ட மோதல் உலகுக்கே தெரிந்தது. எப்போதும், கங்குலிக்கு பயிற்சியாளர் என்றாலே கடுப்புதான்.

இந்த விழாவில் பத்திரிக்கையாளர் ஒரு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கங்குலி இவ்வாறு கூறினார் " கிரிக்கெட் ஒன்றும் கால்பந்தாட்டம் இல்லை. இப்போதுள்ள பல கிரிக்கெட் பயிற்சியாளர்கள் கிரிக்கெட் அணியிலை கால்பந்தாட்ட அணியை போல நடத்தலாம் என நினைக்கிறார்கள். கிரிக்கெட் என்பது கேப்டனின் ஆட்டம். ரவி சாஸ்திரி போன்ற பயிற்சியாளர்கள் பின்னாடிதான் இருக்க வேண்டும். கேப்டன்தான் முன்னே நின்று அணியை வழி நடத்த வேண்டும்" என காட்டமாக கூறியுள்ளார்.

Read Also -> ‘பேட்ட’ நடன இயக்குனர் ஆரம்பித்துள்ள புதிய ‘டான்ஸ் கஃபே’

அப்போது கங்குலியிடம் நிருபர் ஒருவர் "நீங்கள் ரவி சாஸ்திரியிடம் கேள்வி கேட்க வேண்டுமென்றால் என்ன கேட்பீர்கள் ?" அதற்கு கங்குலி "சாஸ்திரி அணியை நீங்கள் தேர்வு செய்கிறீர்களா இல்லை ரோகித் சர்மாவா ?" என கேட்க விரும்புவதாக பதிலளித்தார். மேலும் தொடர்ந்த கங்குலி "விராட் கோலி இன்னும் கொஞ்சம் மேம்பட வேண்டும். கோலிக்கு ஏகப்பட்ட பிரஷர்கள் இருக்கிறது. அதை அவர் குறைத்துக்கொள்ள வேண்டும். இந்தியா நவம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. ஆனால், இப்போதுள்ள ஆஸி அணி கடந்ச 25 ஆண்டுகளில் இல்லாத பலவீனமான அணி" என தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close