[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

பிறந்த நாளில் மிரட்டிய ரஷித்கான்: சுருண்டது பங்களாதேஷ்!

rashid-khan-destroys-bangladesh

பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில், ரஷித் கானின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் நேற்றி மோதின. டாஸ் வென்ற ஆப்கான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 28 ரன்களில் 2 விக்கெட்களை இழந்த நிலையில் தொடக்கவீரர் முகமது ஷாஜத் - ஹஸ்மதுல்லா ஷகிதி ஜோடி நிதானமாக விளையாடியது. ஸ்கோர் 79 ரன்களாக இருந்த போது 37 ரன்னில் ஷாஜத் ஆட்டமிழந்தார். ஹஸ்மத்துல்லா 58 ரன்கள் எடுத்தபோது ரூபல் ஹூசைன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால், 160 ரன்னிற்குள் ஆப்கான் அணி 7 விக்கெட்டை இழந்தது.

Read Also -> பங்களாதேஷை இன்று சந்திக்கிறது இந்தியா: பாம்பு டான்ஸ் உண்டா பாஸ்?

  

இந்நிலையில் குல்பதின் நைப் - ரஷித் கான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடைசி 9 ஓவர்களில் விக்கெட்டை இழக்காத இந்த ஜோடி, நேர்த்தியாக விளையாடியது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. நைப் 42, ரஷித் கான் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பங்களாதேஷ் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன் 4 விக்கெட் சாய்த்தார். 8வது விக்கெட்டுக்கு நைப்-ரஷித் கான் ஜோடி 95 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 

Read Also -> இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது: சாதனை நதீம் மகிழ்ச்சி!

பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணியால் ஆப்கானின் சுழலை எதிர்கொள்ள முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 6 ரன்னிலும் நஸ்மும் ஹூசைன் 7 ரன்னிடலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஷகிப் அல் ஹசன் கொஞ்ச நேரம் தாக்குப் பிடித்தார். அவருக்கு அடுத்து வந்தவர்களில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் அந்த அணி 42.1 ஓவர்களில் 119 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.  ஷகிப் 32 ரன்களும் மஹ்மத்துல்லா 27 ரன்களும் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், முஜிபுர் ரகுமான், நைப், தலா இரண்டு விக்கெட்டுகளையும் நபி, அப்தாப் ஆலம், ரஹ்மத் ஷா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ரஷித்கானுக்கு நேற்று பிறந்தநாள். பேட்டிங்கின்போது அவர், 37 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசி 57 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் 9 ஒவர்கள் வீசி மூன்று மெய்டன்களுடன் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டைச் சாய்த்தார். இதையடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Read Also -> பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட காவலர்: வைரலாகும் வீடியோ  

ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்த ரஷித் கானுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதிக அனுபவமில்லாத ஆப்கான் அணி தொடர்ச்சியாக 50 ஓவர்களை முழுமையாக விளையாடுகிறது. இலங்கைக்கு எதிரான போட்டியில் அந்த அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது.
..........

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close