[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்
  • BREAKING-NEWS பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்

“என் வாழ்க்கையை புரட்டி போட்டவர் தோனிதான்” - கேதர் ஜாதவ் நெகிழ்ச்சி

asia-cup-2018-ms-dhoni-brought-out-the-bowler-in-me-says-kedar-jadhav

இந்திய அணியில் உள்ள பல்வேறு வீரர்கள் தங்களது திறமையை சரியாக வெளிப்படுத்த காரணமாக திகழ்ந்தவர் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. பின் வரிசையில் விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மாவை தோனிதான் தொடக்க வீரராக களமிறக்கினார். அந்த வாய்ப்பை ரோகித் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அதேபோல், கே.எல்.ராகுல், பும்ரா உள்ளிட்ட பல வீரர்களின் நிலை மாறுவதற்கு தோனி முக்கிய பங்களிப்பை செலுத்தியுள்ளார். 

அந்த வரிசையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவும் ஒருவர். இவர் தற்போது இந்திய அணியில் பகுதி நேர சுழல் பந்துவீச்சாளராக இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிராக 2016ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தோனிதான் அவரை பந்துவீச்சாளராக அறிமுகம் செய்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 

         

“தோனி என்னை பந்து வீச்சாளராக அறிமுகப்படுத்திய பின்னர் என்னுடைய வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. பயிற்சியின் போது நான் அதிக பந்துவீச மாட்டேன். நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் பயிற்சியின் போது சில ஓவர்கள் மட்டுமே பந்துவீசி பயிற்சி எடுப்பேன். பந்துவீச்சாளராக ஆக வேண்டும் என நினைத்து அதிகம் பயிற்சி செய்தால் இருக்கும் திறமையும் குறைந்துவிடும் என்று நினைத்தேன். சரியாக கணித்து பந்துவீசினால், நல்ல பலன் தானாக கிடைக்கும். ஸ்டம்பை குறி வைத்தே நான் பந்து வீசுவேன். பேட்ஸ்மேன் கணித்து அடித்தால் ரன் கிடைக்கும். இல்லையென்றால் நிச்சயம் விக்கெட் தான்” என்கிறார் கேதர். 

         

33 வயதான கேதர் ஜாதவ் உண்மையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தான். தற்போது அவர் ஒரு ஆல் ரவுண்டராக உருவெடுத்துள்ளார். அதேபோல், பீல்டிங்கிலும் கேதர் படு சுட்டி. அதனால், பல நேரங்களில் பீல்டிங்கால் காயம் அடைந்துவிடுகிறார். சமீபத்தில் கூட கேதர் அறுவை சிகிச்சை ஒன்றினை செய்து கொண்டார். காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய அவர் ஆசியக் கோப்பையில் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். 

“பேட்டிங்கை பொறுத்தவரை என்னுடைய ரோல் பினிஷர். அணியில் ஒவ்வொருவருக்கும் ஒரு முக்கிய பங்களிப்பு இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அது இருக்கும். அதனைதான் நாங்கள் பின்பற்றுவோம். போட்டியின் இறுதிவரை நின்று விளையாட வேண்டும் என்பது என்னுடைய திட்டம்” என்கிறார் கேதர்.

        

இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற போட்டியில் கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து அவர் அடித்த 120 ரன்கள் மிகவும் முக்கியமானது. 351 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 63 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. அப்போது விராட் கோலியுடன் இணைந்து 76 பந்துகளில் 120 ரன்கள் விளாசினார். விராட் கோலியும் 122 ரன்கள் எடுத்திருந்தார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close