[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு - விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது

national-sports-awards-2018-announced-mirabai-chanu-virat-kohli-to-get-rajiv-gandhi-khel-ratna

2018-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேசத்தின் உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற மீரா பாய் சானு ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. மேலும் 20 பேருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தடகளத்தில் முத்திரை பதித்த ஜின்சன் ஜான்சன், ஹிமா தாஸ், ஹாக்கி வீரர்-வீராங்கனையான மன்ப்ரீத் சிங், சவீதா, துப்பாக்கிச்சுடுதல் வீரர்-வீராங்கனைகளான அங்கூர் மிட்டல், ஷிரேயாஸி சிங், ராஹி சர்னோபத், டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன், வீராங்கனை மணிகா பத்ரா, டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, வுஷூ வீரர் பூஜா காடியன் , பாராலிம்பிக் வீரர்களான அங்குர் தமா, மனோஜ் சர்க்கார் ஆகியோர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

        

மல்யுத்த வீரர் சுமித், போலோ வீரர் ரவி ரத்தோர், பேட்மிண்டன் வீராங்கனை சிக்கி ரெட்டி, கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, கால்ஃப் வீரர் ஷூபாங்கர் ஷர்மா ஆகியோருக்கும் அர்ஜூனா விருது வழங்கப்பட உள்ளது. இதேபோல் துரோணாச்சார்யா விருது 8 பேருக்கும், தயான்சந்த் விருது 4 பேருக்கும் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கான விருதுகளை வரும் 25ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குவார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close