[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

அசார் படக்குழு மீது கடுப்பான ரவி சாஸ்திரி

ravi-shastri-miffed-with-emraan-hashmi-s-azhar-for-portraying-him-as-womanizer

முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் வாழ்க்கை குறித்த அசார் படத்தில் ரவி சாஸ்திரியைத் தவறாகச் சித்தரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மேட்ச் பிக்சிங் புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி அசார் என்ற பெயரில் எடுக்கப்பட்ட இந்தி படம் கடந்த 13-ல் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் தங்களது பாத்திரங்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாக அசாரின் முதல் மனைவி சங்கீதா பிஜ்லானி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் ஆகியோர் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், அசார் படம் குறித்து அடுத்த புகார் எழுந்துள்ளது. இதில், அசாருடன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த ராவி சாஸ்திரி குறித்து படம் தவறான முறையில் சித்தரிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

அசார் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தபோது, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ரவி சாஸ்திரி வைத்தார். அதற்குப் பதிலடியாகவே அசார் படத்தில் ரவிசாஸ்திரியைச் சித்தரித்து முகமது அசாருதீன் பதிலடி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close