[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்
  • BREAKING-NEWS பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிடம் தோற்று வெளியேறியது இலங்கை!

spinners-knock-sri-lanka-out-of-asia-cup

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுடன் நடந்த போட்டியில் தோற்றதை அடுத்து இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியின் ரஹ்மத் ஷா அதிகப்பட்சமாக 72 ரன்களும் இஹ்ஷானுல்லா 45 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் திசாரா பெரேரா 5 விக்கெட் வீழ்த்தினார். அகிலா தனஞ்செயா 2 விக்கெட்டுகளும் மலிங்கா, சமீரா, ஜெயசூர்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Read Also -> இந்தியா - பாகிஸ்தான் ! ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' ?  

பின்னர், 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் சார்பில், குசால் மெண்டிஸ் மற்றும் உபுல் தரங்கா ஆகியோர் களமிறங்கினர். இதில் மெண்டிஸ் வந்த வேகத்திலே, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பிறகு களமிறங்கிய டி சில்வா 23 ரன்களில் ரன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து குசால் பெரேரா 17 ரன்னிலும், உபுல் தரங்கா 36 ரன்னிலும், ஷேகான் ஜெயசூர்யா 14 ரன்னிலும், கேப்டன் மேத்யூஸ் 22 ரன்னிலும், விக்கெட்டை இழக்க இறுதியில் திசாரா பெரேரே (28) போராடி பார்த்தார். இறுதியில் இலங்கை அணி 41.2 ஒவர்களில் 158 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

Read Also -> ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா- ஹாங்காங் இன்று மோதல்!

ஆப்கான் சார்பில் முஜிபுர் ரஹ்மான், நபி, நைப், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது. 

இலங்கை அணி ஏற்கனவே பங்களாதேஷ் அணிக்கு எதிராகத் தோல்வியை சந்தித்திருந்தது. இதனால் இரண்டு போட்டிகளில் தோற்றதால் தொடரில் இருந்து வெளியேறியது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close