[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

பொறுப்புடன் அரைசதம் அடித்த ரகுமத் - இலங்கையை மிரட்டும் ஆப்கான்

2018-asia-cup-srivsafg

ஆசிய கிரிக்கெட் கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடும் ஆசிய கிரிக்கெட் கோப்பைத் தொடர், கடந்த 15ஆம் தேதி துபாயில் தொடங்கியது. அன்றைய தினத்தில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதின. இதில் இலங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. இதில் 8 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் எளிமையான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இன்று இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முகமது மற்றும் இஷானுல்லா ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முகமது 34 (47) மற்றும் இஷானுல்லா 45 (65) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். பின்னர் வந்த ரகுமத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 65 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர் 72 (90) எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். தற்போது ஆப்கானிஸ்தான் 4விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. இலங்கையில் அணியில் அகிலா தனஞ்ஜெயா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close