[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்

ஆசியக் கோப்பை போட்டி: பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது ஹாங்காங்!

asia-cup-2018-hong-kong-to-meet-pakistan-today

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஹாங்காங் அணியை பாகிஸ்தான் அணி  எதிர்கொள்கிறது.

14-வது ஆசிய கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று தொடங்கிய முதல் போட்டியில் இலங்கை-பங்களாதேஷ் அணிகள் மோ தின. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்து 261 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 35.2 ஓவரில் 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடக்கி றது. இதில்  பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. 

முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான், பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் வலுவாக விளங்குகிறது. அனுபவம் இல்லாத ஹாங்காங்கை பாகிஸ் தான் எளிதாக வெற்றிக்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. 2014 ஆம் ஆண்டில் சர்வதேச ஒரு நாள் போட்டி அந்தஸ்து பெற்ற ஹாங்காங், இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த அந்தஸ்தை பறிகொடுத்தது. இருப்பினும் அன்சூமான் ராத் தலைமையிலான அந்த அணி தகுதி சுற்றில் வெற்றி பெற்று ஆசிய போட்டிக்கு நுழைந்துள்ளது.

போட்டி, மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close