[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு
  • BREAKING-NEWS சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

வயசு 102.. பேரு மன் கவுர்.. அப்புறம் ?

india-s-102-year-old-female-athlete-wins-gold-medal-at-world-masters-athletics

இது இந்த வருடமும் நடந்தது. வயது ஒன்றும் பெரிய தடையில்லை. மனுசு மட்டும் இருந்தா போதும். ஓடி ஜெயிக்க முடியும்னு நிரூபிச்சிருக்காங்க மன் கவுர். போன வருஷம் நியூசிலாந்துல நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றார் இந்தியாவின் மன் கவுர். சமூக வலைத்தளங்கள் கொண்டாடின. 

உலக மாஸ்டர்ஸ் அதெலடிக்ஸ்.. வருஷா வருஷம் ஏதாவது ஒரு நாட்டுல நடக்கும். மன் கவுர் இந்த போட்டியில கலந்து கொண்டு ஜெயிச்சப்ப தான் நம்ம நாட்டுல இப்படியும் இரு போட்டி இருக்கோனு பலருக்கும் தெரிஞ்சது. இந்த வருஷம் ஸ்பெயின்ல நடந்துச்சு மாஸ்டர்ஸ் அதெலெடிக்ஸ். மிகுந்த நம்பிக்கையோடும் , முந்தைய உற்சாகத்தோடும் இந்த போட்டியில் கலந்து கொண்டார் மன் கவுர். 

மொத்த தூரம் 200 மீட்டர். கலந்து கொள்ள கூடியவர்கள் வயது 100முதல் 104. நம்பிக்கையோடு களம் இறங்கிய மன் கவுர் இறுதியில் தங்கம் வென்றார். 102 வயதில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தார். இலக்கை அடைந்ததும் மன் கவுர் தன்னை மறந்து ஆனந்தத்தில் சிரித்த அவரது முகம் ட்விட்டரில் எங்கெங்கும் காணக் கிடைக்கிறது. சமூக வலைத்தளங்களில் மன் கவுர் வைரலானார். ட்விட்டர் வாசிகள் தங்கள் பாராட்டு மழை பொழிந்தனர்

மன் கவுர் தனது 93 வயதில் இருந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். எப்படியாவது மாஸ்டர்ஸ் அதலெடிக்ஸ் போட்டியில் தங்கம் வெல்வதை இலக்காக கொண்டார். முதல்முறையாக பயிற்சி எடுக்கும் போது 100 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் 1 நொடியில் கடந்திருக்கிறார் மன் கவுர். அவரின் 78 வயது மகனே இந்த முயற்சிக்கும் , வெற்றிக்கும் காரணம் என்கிறார் மன் கவுர். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : SportsAtheletMan kaurWorld champioshipSocial media viralIndia
Advertisement:
Advertisement:
[X] Close