[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

செரினா சண்டையும்... சர்ச்சையான கார்ட்டூனும்..!

serena-williams-cartoon-controversy

மழை நின்றும், தூவானம் விடவில்லை என்பது போல் செரினா வில்லியம்ஸ் தொடர்பான கார்ட்டூன் சர்ச்சையும் நீண்டு கொண்டே போகிறது. செரினா குறித்த‌ கேலிச்சித்திரத்தில் ‌எந்தத் தவறும் இல்லை எனக் கூறி, முதல் பக்கத்தில் மீண்டும் பிரசுரம்‌ செய்துள்ளது ஆஸ்திரேலியாவின் ஹெரால்டு சன் நாளிதழ்.

அண்மையில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியின்போது, முன்னணி வீரங்கனையான செரினா வில்லியம்ஸ் தனது பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்றதாகக் கூறி அவருக்கு ஒரு புள்ளியை நடுவர் குறைத்திருந்தார். எனினும் தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனக் கூறி, நடுவரை சரமாரியாகத் திட்டித் தீர்த்த செரினா, டென்னிஸ் மட்டையை போட்டு உடைத்து கோபத்தை வெளிப்படுத்தினார். செரினாவின் இந்தச் செயலுக்காக அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே செரினா இறுதிப் போட்டியின்போது நடந்துகொண்டதை மையப்படுத்தி ஆஸ்திரேலியாவின் ஹெரால்டு சன் என்ற நாளிதழில் வெளியான கார்ட்டூன் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மார்க் நைட் என்பவரின் அந்த கார்ட்டூனில், செரினாவை எப்படியாவது வெற்றி பெற வைத்திடு என்று நடுவர், ஜப்பான் வீராங்கனையிடம் கூறுவது போன்ற வா‌சகம் இடம் பெற்றிருந்தது. இனரீதியாக செரினாவை விமர்சித்துள்ளார் என்றும் ‌மார்க் நைட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கண்டனங்களை கண்டுகொள்ளாத ஹெரால்டு சன் நாளிதழ், செரினா பற்றிய கார்ட்டூனை தற்போது முதல் பக்கத்தில் பதிவிட்டு புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. களத்தில் செரினா நடந்து கொண்டதை விமர்சிக்கும் வகையிலேயே கார்ட்டூன் வரைந்ததாகக் கூறியுள்ள மார்க் நைட் , மற்றபடி இனரீதியாகவோ, பாலின ரீதியாகவோ எந்தக் கருத்தையும் அதில் வெளிப்படுத்தவில்லை என விளக்கமளித்துள்ளார். சக்தி வாய்ந்த ஆப்ரிக்க அமெரிக்க பெண் போன்றுதான் செரினாவின் படத்தை வரைந்ததாகக் கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, “செரினாவை குறிவைத்து‌‌ நான் கார்ட்டூன் வரையவில்லை. செரினா சாம்பியன் வீராங்கனை. செரினாவை சக்திவாய்ந்த ஆப்ரிக்க அமெரிக்க பெண்ணாக சித்தரித்தே வரைந்துள்ளேன். அனைவரையும் கவரும் வகையில் ஆடை அணிவதில் செரினா விருப்பம் கொண்டவர் என்பதை மையப்படுத்தியே வரைந்திருந்தேன். சிலர் கூறுவது போன்று இது இனரீதியான கார்ட்டூன் அல்ல” என்றார்.

ஆஸ்திரேலிய நாளிதழ் மறுபடியும் செரினா பற்றிய கேலிச்சித்திரத்தை பிரசுரித்திருப்பது சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close