[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்

கே.எல்.ராகுல், ரிஷப் அதிரடி சதம் - போராடி தோற்றது இந்தியா

india-vs-england-5th-test-england-beat-india-by-118-runs-clinch-five-match-series-4-1

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 332 ரன்களும், இந்திய அணி 272 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 423 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. 

இதனையடுத்து 464 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை இழந்தது. தவான் ஒரு ரன்னிலும், புஜாரா, விராத் கோலி டக் அவுட் ஆகியும் வந்த வேகத்தில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். கே.எல்.ராகுலும் ரஹானேவும் ஆடினர். நான்காம் நாளான நேற்றையை ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 41, ரகானே 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 

இந்நிலையில், ஐந்தாம் நாளான இன்று கே.எல்.ராகுலும், ரகானேவும் ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறப்பாக விளையாடிய ராகுல் 87 பந்துகளில் அரைசதம் அடித்தார். நிதானமாக விளையாடிய ரகானே 37 ரன்னில் ஆட்டமிழந்தார். ராகுல் - ரகானே ஜோடி 4வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தது. ரகானே ஆட்டமிழந்த உடனே விஹாரி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். 

    

விக்கெட்கள் ஒருபுறம் வீழ்ந்து கொண்டே சென்றாலும், மறு முனையில் அதிரடி குறையாமல் கே.எல்.ராகுல் ரன்களை குவித்தார். 118 பந்துகளில் அதிரடி சதத்தினை அவர் பதிவு செய்தார். அதேபோல், கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ரிஷப் பண்ட் 117 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 300 ரன்களை விரைவாக கடந்தது. 

இந்திய அணி படுதோல்வி அடையும் என்ற நிலையில் இருந்து, வெற்றி பெறலாம் என்ற இடத்துக்கு இந்த ஜோடி கொண்டு வந்தது. ஆனால், 149 ரன்னில் கே.எல்.ராகுலும், 114 ரன்னில் ரிஷப் பண்ட்டும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்பொழுது 328 ரன்களுக்கு இந்திய அணி 7 விக்கெட்களை இழந்தது. மேற்கொண்டு 17 ரன்கள் சேர்ப்பதற்குள் 345 ரன்னிற்கு இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனால், 118 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது. 

டி20 தொடரில் இந்திய அணி வென்ற நிலையில், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது. இங்கிலாந்து தொடரை மிகவும் சிறப்பான முறையில் இந்திய அணி தொடங்கினாலும் முடிவு சோகமாக அமைந்துவிட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close