[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

சிக்சர் அடித்ததும் மிரட்டினாரா பென் ஸ்டோக்ஸ்? விஹாரி விளக்கம்!

ben-stokes-had-a-few-words-to-say-after-hit-a-six-vihari

மைதானத்துக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே பதட்டத்தை உணர்ந்தேன் என்று இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹனுமா விஹாரி சொன்னார்.

இங்கிலாந்து- இந்திய அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குக் 71 ரன்களும் ஜாஸ் பட்லர் 89 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்களை சாய்த்தார். பும்ரா, இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 

Read Also -> விராத் கோலியுடன் வாக்குவாதம்: இங்கி. பந்துவீச்சாளருக்கு அபராதம்! 

பின்னர் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 292 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி இந்த ஸ்கோரை எட்ட, அறிமுக வீரராக களமிறங்கிய ஆந்திராவைச் சேர்ந்த ஹனுமா விஹாரியுடன் சுழல் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும் காரணம். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில் இருவரும் நிலைத்து நின்று ரன்கள் சேர்த்தனர். விஹாரி 121 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து விஹாரி கூறும்போது, ’ அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு முந்தைய நாள் ராகுல் டிராவிட்டுக்கு போன் செய்து சொன்னேன். அவர் சில நிமிடங்கள் பேசி எனக்கு நம்பிக்கை அளித்தார். ’பதட்டமில்லாமல் ஆடு, மனதை தைரியமாக வைத்துக்கொள், ரசித்து விளையாடு’ என்றார். அவருக்கு நான் கடமைபட்டிருக்கிறேன். இந்திய ஏ அணியில் இருந்து எனது வளர்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது. அவர் சொன்னபடியே களத்தில் இறங்கினேன். ஆனால், பதட்டம் தொற்றிக்கொண்டது.

அதை அதிகரிக்க விடாமல் பார்த்துக்கொண்டேன். செட்டில் ஆகும் வரை பந்துகளை மெதுவாகவே எதிர்கொண்டேன். மறுமுனையில் இருந்த விராத் கோலியும் அடிக்கடி நம்பிக்கை அளித்தார். பிறகு பென் ஸ்டோக்ஸ் பந்தில் சிக்சர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினேன். அவரால் இதை தாங்க முடியவில்லை. கோபத்தில் ஏதோ சொன்னார். உடனடியாக கோலி அவர் அருகில் சென்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. என்னைத் தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்லியிருந்தால் கண்டிப்பாக பதில் அளித்திருப்பேன். ஆனால் ஃபீல்டில் சிலர் சில ஸ்டைல்களை கையாள்கிறார்கள். எனது ஸ்டைல், இதுபோன்ற விஷயங்களை புறக்கணித்துவிட்டு ஆட்டத்தில் கவனம் செலுத்துவது மட்டுமே. அதனால் ஸ்டோக்ஸ் சொன்னதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை’ என்றார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close