[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

கடைசி டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து!

cook-builds-england-s-lead-in-last-hurrah

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.

இங்கிலாந்து- இந்திய அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குக் 71 ரன்களும் ஜாஸ் பட்லர் 89 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்களை சாய்த்தார். பும்ரா, இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 

Read Aslo -> சிக்சர் அடித்ததும் மிரட்டினாரா பென் ஸ்டோக்ஸ்? விஹாரி விளக்கம்!

Read Also -> பாகிஸ்தானில் அணைகட்ட கிரிக்கெட் நடுவர் நிதி உதவி!  

இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. 3 ரன் எடுத்த நிலையில் ஷிகர் தவான், பிராட் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். தொடர்ந்து கே.எல்.ராகுல் 37 ரன்னில் சாம் கர்ரனின் பந்து வீச்சில் போல்டு ஆனார். 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராத் கோலி வந்தார். கொஞ்சம் தாக்குப்பிடித்து ஆடிய புஜாரா 37 ரன்களில் ஆண்டர்சனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் ஆண்டர்சனிடம் வீழ்ந்தார்.

பின்னர் கேப்டன் கோலியும், ஹனுமா விஹாரியும் அணியை தூக்கி நிறுத்த போராடினார். ரன்சேர்ப்பில் வேகம் காட்டிய நேரத்தில் இந்த ஜோடி யை பென் ஸ்டோக்ஸ் பிரித்தார். கோலி 49 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் 5 ரன்னில் வெளியேற, தடுமாறி யது இந்திய அணி. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அறிமுக வீரர் ஹனுமா விஹாரி 25 ரன்னுடனும் ஜடேஜா 8 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்தது.

Read Also -> 'ரிஷப் பன்ட் விஷயத்தில் அவசரப்படாதீர்கள்' கில்கிறிஸ்ட் யோசனை

 நிலைத்து நின்று ஆடிய விஹாரி, அவ்வப்போது பவுண்டரிகளுக்கு பந்துகளை விரட்டினார். அவர் 124 பந்துகளை சந்தித்து 56 ரன்களில் மொயின் அலி பந்துவீச்சில் அவுட் ஆனார். அவருக்கு பக்கப்பலமாக நின்ற ஜடேஜா, பேட்டிங்கிலும் அசத்தினார். 156 பந்துகளை சந்தித்த அவர் 86 ரன்கள் எடுத்தார். கடைசி விக்கெட்டுக்கு அவருக்கு துணையாக நின்ற பும்ரா ரன் அவுட் ஆனதால் இந்திய அணி 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. தொடக்க ஆட்டக்காரர் ஜென்னிங்ஸை (10 ரன்) முகமது ஷமி போல்டாக் கினார். மொயின் அலியை (20) ஜடேஜா காலி செய்ய, நேற்றைய அட்ட நேர முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்துள் ளது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குக் 46 ரன்களுடனும் கேப்டன் ரூட் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி 154 ரன்கள் முன்னிலை பெற்று ஆடிவருகிறது. இன்று 4ஆம் நாள் ஆட்டம் நடக்கிறது. 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close