[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

நாளை கடைசி டெஸ்ட்: பாண்ட்யாவுக்கு பதில் விஹாரி, இந்திய அணியில் மாற்றம்!

5th-test-vihari-for-hardik-pandya-jadeja-for-r-ashwin

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இதில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. சவுதாம்டனில் நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. இதையடுத்து இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் தோல்வி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 

Read Also -> கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆர்.பி.சிங்!  

இந்திய அணியில் கேப்டன் விராத் கோலி தவிர வேறு யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. கடந்த போட்டியில் மட்டும் புஜாரா அபார சதமடித்தார். மற்ற வீரர்களின் ஆட்டத்திறன் சிறப்பானதாக இல்லை. 

இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் மீண்டும் காயமடைந்துள்ளார். வலைப்பயிற்சியில் அவர் ஆடவில்லை. இங்கிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன்பு எஸ்செக்ஸ் அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தின் போதே அஸ்வின் வலது கையில் காயமடைந்திருந்தார்.

Read Also -> “அரசு உதவியிருந்தால் தங்கம் வென்றிருப்பேன்” - கெஜ்ரிவாலை விளாசிய திவ்யா 

(விஹாரி)

பின்னர் குணமாகி, ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் காயத்துடனேயே ஆடினார். இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடுவாரா என்பது கேள்விக்குறியாகி இருந்தது. காயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றதால் அணியில் சேர்க்கப்பட்டார். இருந்தாலும் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து அவர் 3 விக்கெட் மட்டுமே எடுத்தார். இந்நிலையில் அவர் மீண்டும் காயமடைந்துள்ளதால் ஜடேஜா களமிறங்குகிறார். 

டெஸ்ட் வீரர் என்ற முத்திரைக் குத்தப்பட்டு ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின், ஜடேஜா இருவரும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இங்கிலாந்து தொடரில் அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு விட்டதால் கடைசி டெஸ்ட்டிலாவது ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

தொடக்க ஆட்டக்காரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் கே.எல்.ராகுலுக்குப் பதில் இளம் வீரர் பிருத்வி ஷா சேர்க்கப்படலாம். இல்லை என்றால் ராகுலுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம். ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதில் ஹனுமா விஹாரியை டெஸ்ட் போட்டியில் அறிமுகப்படுத்தவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் தர போட்டியில் அபாரமான சராசரியை வைத்துள்ள விஹாரி, இங்கிலாந்தில் நடந்த முத்தரப்பு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அவர் மிடில் ஆர்டரில் ’நின்று’ விளையாடுவார் என்று நம்புகிறது அணி. நேற்றைய பயிற்சியில் அவர் பந்துவீச்சிலும் ஈடுபட்டார். இதனால் அவர் அணியில் சேர்த்துக்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது.

தொடரை இழந்துவிட்டாலும் கடைசி டெஸ்ட்டில் வென்று ஆறுதல் தேட இந்திய அணி நினைக்கிறது. இதனால் இந்தப் போட்டியில் மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரம் பிட்சின் தன்மையை பொறுத்தே கடைசி நேரத்தில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதே போல இங்கிலாந்து அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், போப் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close