[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

“இது சிறந்த அணிதான்” - விமர்சித்தவர்களை விளாசிய ரவிசாஸ்திரி

this-team-has-played-better-overseas-than-indian-teams-of-last-15-20-years-ravi-shastri

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடி தோற்றாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆனால் மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

இந்தத் தொடரில் கேப்டன் விராட் கோலியை தவிர மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. புஜாரா, ரகானே உள்ளிட்ட வீரர்கள் ஏதோ ஒரு சில இன்னிங்சில் மட்டும் சிறப்பாக விளையாடினர். ஆனால், பெரும்பாலான நேரங்களில் சொதப்பினர். தொடக்க வீரர்களான ஷிகர் தவான், கேஎல்.ராகுல் பெரிதாக ஸ்கோர் அடிக்கவில்லை. இதனால், விராட் கோலியை தவிர்த்து மற்ற வீரர்கள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால்தான் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

இந்திய அணியின் தோல்வி குறித்து பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். பேட்ஸ்மேன்கள் மீது மட்டுமல்லாமல் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீதும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும் ரவி சாஸ்திரி குறித்தும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். ரவி சாஸ்திரி தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சேவாக் கூட பயிற்சியாளர் ரவிசாஸ்திரையும் விமர்சித்து இருந்தார்.

  

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “நம்முடைய வீரர்கள் முடிந்த அளவிற்கு கடுமையாக போராடினார்கள். ஆனால், இங்கிலாந்து அணி நம்மைவிட ஒரு படி மேல் இருந்து வெற்றி பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளை கவனித்தால், நாம் 9 போட்டிகளை வென்றுள்ளோம். 3 தொடர்களை வென்றுள்ளோம்.

போட்டியில் தோல்வி அடைந்துள்ள தருணத்தில் நாம் வருத்தம் அடைந்திருப்போம். இந்த நேரத்தில் சூழ்நிலையை சமாளிப்பதற்கான பதிலுடன் வெளியே வர வேண்டியுள்ளது. நம்பிக்கையுடன் நீங்கள் இருந்தால், ஒரு நாள் நீங்கள் விரும்பியது நடக்கும். கடந்த 15-20 ஆண்டுகளில் வேறு எந்த இந்திய அணியும் குறுகிய காலத்தில் இதுபோன்று ரன்களை அடித்ததில்லை. முந்தைய அணிகளில் சிறந்த வீரர்கள் கூட இருந்திருக்கிறார்கள். 

கடினமான மனநிலையை பெற்றிருக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று கடுமையான போட்டிகளை எதிர் கொள்கிறோம். சிறப்பாக விளையாடுகிறோம். ஆனால், தற்போது விளையாடுவது மட்டும் முக்கியமல்ல. போட்டிகளில் வெற்றி பெறவும் வேண்டும். நீங்கள் தவறுகள் செய்தால், அதனை கவனித்து சரி செய்து கொள்ள வேண்டும்.

போட்டியில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. ஆனால், இரு அணிகளும் அடித்துள்ள ரன்களை பொறுத்து பார்த்தால் இந்திய 3-1 அல்லது 2-2 என எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இருப்பினும் போட்டியில் தோற்றது எங்களை பாதித்துவிட்டது” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close