வெளிநாடு பயணங்களுக்கு செல்வது மைதானத்தில் விளையாடத்தான். டிரெஸிங் அறையில் உட்கார்ந்திருக்க அல்ல என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடி தோற்றாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆனால் மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
இந்தத் தொடரில் கேப்டன் விராட் கோலியை தவிர மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. புஜாரா, ரகானே உள்ளிட்ட வீரர்கள் ஏதோ ஒரு சில இன்னிங்சில் மட்டும் சிறப்பாக விளையாடினர். ஆனால், பெரும்பாலான நேரங்களில் சொதப்பினர். தொடக்க வீரர்களான ஷிகர் தவான், கேஎல்.ராகுல் பெரிதாக ஸ்கோர் அடிக்கவில்லை. இதனால், விராட் கோலியை தவிர்த்து மற்ற வீரர்கள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால்தான் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
இந்திய அணியின் தோல்வி குறித்து பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். பேட்ஸ்மேன்கள் மீது மட்டுமல்லாமல் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீதும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும் ரவி சாஸ்திரி குறித்தும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். ரவி சாஸ்திரி தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து வீரேந்திர சேவாக் கூறுகையில், “சிறந்த வெளிநாடுகளுக்கான அணி தங்களது ஆட்டத்திறனை மைதானத்தில் காட்டுவதன் மூலம் உருவாகிறது. டிரெஸிங் அறையில் அமர்ந்து பேட்டிங்கை பற்றி பேசுவதால் அல்ல. நீங்கள் பேச விரும்பியதை எல்லாம் பேசலாம். ஆனால் அது உங்களுடைய பேட் பேசாத வரைக்கும்தான். அவர்களால் சிறந்த டிராவலிங் அணியாக இருக்க முடியாது” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை...!
திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு: ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் !
குல்பூஷன் ஜாதவ் வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!
புல்வாமாவில் துப்பாக்கிச் சண்டை: 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்
கமல்ஹாசன் நிதானமின்றி பிதற்றுகிறார் முரசொலி கடும் விமர்சனம்