[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு

அஸ்வின் மீண்டும் காயம், களமிறங்குகிறார் ஜடேஜா!

injured-ashwin-may-sit-out-jadeja-will-include

சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் மீண்டும் காயமடைந்துள்ளதால் அடுத்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா களமிறக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. 

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. சவுதாம்டனில் நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. இதையடுத்து இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் தோல்வி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 

ஐந்தாவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் 7-ம் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் மீண்டும் காயமடைந்துள்ளார். அவர் ஞாயிற்றுக்கிழமை பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டபோது அவர் காயமடைநதார். இதனால் ஐந்தாவது டெஸ்ட் போட் டியில் அவர் ஆடுவது சந்தேகம் என்கிறார்கள்.

இங்கிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன்பு எஸ்செக்ஸ் அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தின்போதே அஸ்வின் வலது கையில் காயமடைந்திருந்தார் அஸ்வின். 

பின்னர் குணமாகி ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் காயத்துடனேயே ஆடினார். இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடுவாரா என்பது கேள்விக் குறியாகி இருந்தது. காயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றதால் அணியில் சேர்க்கப்பட்டார். இருந்தாலும் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து அவர் 3 விக்கெட் மட்டுமே எடுத்தார்.

இந்நிலையில் அவர் மீண்டும் காயமடைந்துள்ளதால் ஜடேஜாவுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. நான்காவது டெஸ்ட் போட்டியி லேயே ஜடேஜா களமிறங்கியிருக்க வேண்டும். ஒரே சுழல் பந்துவீச்சாளர் போதும் என்று முடிவு செய்யப்பட்டதால் அவர் களமிறங்கவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close