[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

5-வது டெஸ்ட்: ராகுல் சொதப்பல், பிருத்வி ஷாவுக்கு வாய்ப்பு

rahul-may-make-way-for-prithvi

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் கவலை அடைந்துள்ள இந்திய அணி, ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் பிருத்வி ஷாவை களமிறக்க முடிவு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடி தோற்றாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆனால் மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

இந்திய அணியின் தோல்வி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதையடுத்து ஐந்தாவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் 7-ம் தேதி நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read Also -> அஸ்வின் மீண்டும் காயம், களமிறங்குகிறார் ஜடேஜா!  

Read Also -> கோலி கேப்டனா இருந்து என்ன 'யூஸ்' ? சுனில் கவாஸ்கர் விளாசல்

தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய், முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 20 ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன்னும் எடுத்திருந்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் டக்-அவுட் ஆனார். இதையடுத்து அவரை நீக்கிவிட்டு கே.எல்.ராகுலை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினர். அவரும் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

அவருக்கு பதிலாக பிருத்வி ஷா களமிறங்குகிறார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக செயல்பட்ட பிருத்வி ஷா, சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஏ அணிக்கான தொடரில் சிறப்பாக செயல்பட்டார். இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவரது பேட்டிங் நம்பிக்கை அளிக்கும்படி இருந்தது. அதோடு 14 முதல் தரபோட்டியில் விளையாடியுள்ள பிருத்வி ஷாவின் சராசரி 56.72. ஐந்தாவது போட்டி நடக்கும் லண்டன் ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் பிருத்வி ஷாவால் சிறப்பாக விளையாட முடியும் என்றும் இதனால் அவரை டெஸ்ட்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக் கூறப்படுகிறது.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close