[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்
  • BREAKING-NEWS தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது 'விர்ச்சுவல் சிம் கார்டு'-தீவிரமடையும் விசாரணை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை

“என்னிடம் கொடுக்க இனி ஒன்றுமில்லை” - ஓய்வை அறிவித்தார் குக்

alastair-cook-has-announced-his-retirement-with-the-next-test-match

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் அடுத்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து அடுத்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரும், சீனியர் வீரருமான இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 

33 வயதான குல் 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12, 254 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.88 ஆகும். அதில், 32 சதங்களும், 56 அரை சதங்களும் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் குக் 6வது இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை குக் ஒரு கிளாசிக் வீரராகவே திகழ்ந்தார். இளம் வீரராக 6000, 7000, 8000, 9000, 10,000, 11,000, மற்றும் 12,000 ரன்களை சேர்த்தவர் என்ற பெருமை குக்கிற்கு உண்டு. 

இந்த ஆண்டில் மொத்தம் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குக் வெறும் 18.92 ரன் ரேட் மட்டுமே வைத்துள்ளார். ஏற்கனவே, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடாத குக் தற்போது டெஸ்ட் போட்டிக்கும் குட் பை சொல்லிவிட்டார். இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் குக் பெரிதாக ரன் எதுவும் அடிக்கவில்லை.

இந்த அறிவிப்பை வெளியிட்ட போது, “இது ஒரு சோகமான நாளாக இருந்தாலும், சிரித்த முகத்துடன் இதனை அறிவிக்கிறேன். என்னால் முடிந்தவற்றை கொடுத்துவிட்டேன். என்னிடம் கொடுக்க இனி எதுவும் இல்லை” என்று குக் உருக்கமாக பேசினார். 2006ம் ஆண்டு தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை இந்திய அணிக்கு எதிராக நாக்பூரில் தொடங்கிய குக், தற்போது அதே இந்திய அணிக்கு எதிராக தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் அல்லாமல் விவசாயத்தில் குக் நாட்டம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close