[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்

இங்கிலாந்து ஆல்ரவுண்டரை பாராட்டிய விராத் கோலி!

sam-curran-he-s-been-a-fine-cricketer-virat-kohli

இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கர்ரன் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி பாராட்டினார்.

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்டனில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் சாம் கர்ரன் 78 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் தரப்பில் பும்ரா 3 விக்கெட்கள் சாய்த்தார். முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.

இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 273 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. புஜாரா அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 5 விக்கெட்டுகளையும் பிராட் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

27 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி நேற்று தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. பட்லர் 69, ஜோ ரூட் 48, கர்ரன் 46 ரன்கள் எடுத்தனர். நான்காவது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து மீதமுள்ள இரண்டு விக்கெட்களையும் உடனடியாக இழந்தது. அந்த அணி 271 ரன்களுக்கு ஆட்டமி ழந்த து. இந்திய அணியில் ஷமி 4 விக்கெட்கள் சாய்த்தார். 

Read Also -> இங்கிலாந்து ஆல்ரவுண்டரை பாராட்டிய விராத் கோலி! 

இதனையடுத்து 245 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சை  விளையாடியது. இங்கிலாந்து வீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் இந்திய வீரர்கள் திணறினர். இதையடுத்து 184 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி, 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 4 விக்கெட்டுகளையும் பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, இங்கிலாந்து அணியின் இளம் ஆல் ரவுண்டர் சாம் கர்ரனை பாராட்டினார். போட்டியில் பின் வரிசை வீரர்களும் சிறப்பாக விளையாட வேண்டும். அவர்களும் சிறப்பாக ஆடினால் அதிக ரன்கள் குவிக்க முடியும். சாம் குர்ரன் முந்தைய டெஸ்ட் போட்டியிலும் இந்தப் போட்டியிலும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக இருந்தார். 

Read Also -> முகமது சிராஜ் வேகத்தில் சுருண்டது ஆஸ்திரேலிய ஏ! 

இந்நிலையில் விராத் கோலி கூறும்போது, ’கடைசி கட்டத்தில் அவர்கள் வீரர்கள் சிறப்பாக அடி ரன்கள் குவித்தார்கள். குறிப்பாக சாம் கர்ரனுக்கு வாழ்த்துகள். அவர் கடைசிக்கட்டத்தில் நின்று அதிக ரன்கள் சேர்த்தார். அவர் சிறந்த கிரிக்கெட் வீரர்’ என்றார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும் கர்ரனை பாராட்டினார். அவர் கூறும்போது, ’இந்தப் போட்டி மட்டுமல்ல, இந்த தொடர் முழுவதுமே சாம் கர்ரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close