[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

ஜெயிச்சிடலாம்னு நினைச்சேன், அதுக்குள்ள... விராத் கோலி சோகம்!

i-thought-england-played-really-well-virat-kohli

’இந்தப் போட்டியை வெல்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று நினைத்திருந்தேன். ஆனால் சரியான தொடக்கம் கிடைக்காததால் தோல்வியடைந்தோம்’ என்று இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி கூறினார்.

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்டனில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் சாம் கர்ரன் 78 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் தரப்பில் பும்ரா 3 விக்கெட்கள் சாய்த்தார். முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.

Read Also -> இங்கிலாந்து ஆல்ரவுண்டரை பாராட்டிய விராத் கோலி!

இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 273 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. புஜாரா அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 5 விக்கெட்டுகளையும் பிராட் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

27 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி நேற்று தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. பட்லர் 69, ஜோ ரூட் 48, கர்ரன் 46 ரன்கள் எடுத்தனர். நான்காவது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து மீதமுள்ள இரண்டு விக்கெட்களையும் உடனடியாக இழந்தது. அந்த அணி 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் ஷமி 4 விக்கெட்கள் சாய்த்தார். 

Read Also -> முகமது சிராஜ் வேகத்தில் சுருண்டது ஆஸ்திரேலிய ஏ! 

இதனையடுத்து 245 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சை  விளையாடியது. ரன் கணக்கையே துவங்காமல் கே.எல்.ராகுல் ஆட்டமிழக்க, புஜாரா 5, தவான் 17 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 

இந்த இக்கட்டான நேரத்தில் கேப்டன் விராத் கோலி, ரஹானே ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடினர். இதனால், இந்திய அணியின் ரன் ரேட் மெள்ள உயர்ந்தது.

42.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோலி 114 பந்துகளில் அரைசதம் அடித்தார். 4வது விக்கெட்டுக்கு விராத் - ரஹானே ஜோடி 100 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்தது. அப்போது கேப்டன் விராத் கோலி 58 ரன்னில் மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இது இந்திய இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. வெற்றிக்கு தேவையான பாதி ரன்களை எட்டிவிட்ட நிலையில், முக்கியமான இடத்தில் விராத் ஆட்டமிழந்துவிட்டார்.

இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புகள் இருந்தும் அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஹர்திக் பாண்ட்யா டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் இறங்கிய ரிஷாப் பன்ட் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசினார். ஆனால், அவரும் மொயின் அலி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். நம்பிக்கையுடன் களத்தில் இருந்த ரஹானேவும் மொயின் அலி சுழலில் சிக்கினார். இதனால், இந்தியாவின் வெற்றி சிதைந்தது.

இஷாந்த் ஷர்மாவை ஸ்டோக்ஸ் வெளியேற்ற, முகமது ஷமியை, மொயின் அலி அவுட் ஆக்கினார். கடைசி நேரத்தில் அஸ்வின் ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் அவரும் 36 பந்தில் 25 ரன்கள் எடுத்து கடைசியாக விக்கெட்டை இழந்தார். இந்தியா 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. மொயின் அலி 4 விக்கெட்கள் சாய்த்தார். இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் 4வது டெஸ்ட் போட்டியை வென்றது. அதோடு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

தோல்விக்கு பின் பேசிய விராத் கோலி, ‘முந்தைய நாள் இரவு, இந்தப் போட்டியை வெல்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று நினைத்திருந்தேன். ஆனால் சரியான தொடக்கம் எங்களுக்கு கிடைக்கவில்லை. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசி எங்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார்கள். போட்டி முழுவதுமே எங்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தார்கள். நானும் ரஹானேவும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்த நினைத்தோம். எதிர்பாராதவிதமாக எங்களுக்கு முன் 3 விக்கெட்டுகள் விழுந்துவிட்டன. அடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்தால் அழுத்தம் ஏற்படும் என்று நினைத்தோம். அந்த நெருக்கடி எங்களுக்கு இருந்தது. இந்தப் போட்டியில் புஜாரா சிறப்பாக ஆடினார். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற அவரது ஆட்டம்தான் காரணம். இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். அவர்கள் எங்களை விட சிறப்பாக ஆடினார்கள். இந்தப் போட்டியை வெல்ல அவர்கள் தகுதியானவர்கள்தான். இந்தப் போட்டியில் இருந்து பாசிட்டிவான விஷயங்களை எடுத்துக்கொண்டு அடுத்தப் போட்டியில் சிறப்பாக விளையாடுவோம்’ என்றார்.

அடுத்தப் போட்டி வரும் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close