[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு

விராத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓட்டல் ஊழியர்கள்!

virat-kohli-touched-by-hotel-staff-s-sweet-gesture

டெஸ்ட் போட்டியில் ஆறாயிரம் ரன்களை எடுத்ததற்காக, விராத் கோலி தங்கியிருக்கும் ஓட்டலின் ஊழியர்கள் அவருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்டனில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகப்பட்சமாக சாம் கர்ரன் 78 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டையும் இஷாந்த் சர்மா, ஷமி, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தவானும் கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இருவரும் முறையே, 23, 19 ரன்களில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து புஜாராவும் கோலியும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

 21.5 ஓவரில் ஆண்டர்சன் வீசிய பந்தை பவுண்டரிக்கு விளாசினார் விராத் கோலி. அந்த ரன்களுடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாயிரம் ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டினார். விரைவாக இந்த ரன்களை எட்டிய 2-வது இந்திய வீரர் இவர்.

இந்நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சவுதாம்டனில் உள்ள பிரபலமான ஹார்பர் ஓட்டலில் தங்கியுள்ளனர். ஆறா யிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய விராத் கோலி, போட்டி முடிந்ததும் ஓட்டலுக்கு சென்றார். அப்போது அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள் ஓட்டல் ஊழியர்கள்.

டெஸ்ட் போட்டியில் ஆறாயிரம் ரன்களை எடுத்ததற்காக, பிளேட்டில் அந்த ரன்களை குறிப்பிட்டு செர்ரி பழங்கள் மற்றும் பாம் கேக்கை அழகாக டிசைன் செய்து அவருக்கு பரிசளித்தனர்.. ஓட்டலில் விருந்தோம்பலை பாராட்டியுள்ள விராத் கோலி, அந்த படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close