[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
  • BREAKING-NEWS மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: விராத்துக்கு ஓய்வு, மிடில் ஆர்டருக்கு கடும் போட்டி!

asia-cup-squad-selection-meet-today-in-mumbai

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு இன்று நடக்கிறது. இதில் நடுவரிசையில் ஆடும் வீரர்களை தேர்வு செய்ய கடும் போட்டி நிலவுகிறது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் 14-வது ஆசியக் கோப்பைப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி 28 ஆம் தேதி நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கின்றன.

Read Also -> புஜாரா சதத்தால் வலிமை பெற்றது இந்திய அணி!  

Read Also -> கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பத்ரிநாத்!

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும்.

முதல் போட்டியில் இலங்கை அணியும், பங்களாதேஷும் மோதுகின்றன. செப்டம்பர் 19 ஆம் தேதி இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். அதற்கு முந்தைய நாள், தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. மறுநாளே பாகிஸ்தான் அணியுடன் இந்திய மோதுவது போல போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருப்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தும் அட்டவணை மாற்றப்படவில்லை.

Read Also -> புஜாராவின் பேட்டிங் எப்படி? விளக்குகிறார் பயிற்சியாளர் பங்கர்!

இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான வீரர்கள் தேர்வு மும்பையில் இன்று நடக்கிறது. தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான குழு, மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் கூடி வீரர்களை தேர்வு செய்கிறது. இதில் இங்கிலாந்து தொடரில் இடம்பெற்ற விராத் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படும் என்று தெரிகிறது. இதையடுத்து ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். தொடக்க ஆட்டக்காரராக தவானுடன் ரோகித் இறங்குவார் என்பதால் ராகுல் மற்றொரு தொடக்க வீரராக தேர்வு செய்யப்படுவார். 

’யோ யோ’ தேர்வில் வெற்றி பெறாததால் இங்கிலாந்து தொடரில் இடம் பிடிக்காத அம்பத்தி ராயுடு, காயம் காரணமாக இடம்பெறாத கேதர் ஜாதவ், இந்திய பி அணியில் சிறப்பாக ஆடி வரும் மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், மயங்க் அகர்வால் ஆகியோர் நடுவரிசையில் இடம்பெற கடும்போட்டி போடுகிறார்கள். விக்கெட் கீப்பராக தோனி இடம்பெறுகிறார். மாற்று கீப்பராக ரிஷாப் பண்ட்-க்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

பந்துவீச்சில் புவனேஷ் குமார், பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோருடன் ஷர்துல் தாக்கூர், சித்தார்த் கவுல், தீபக் சாஹர் ஆகியோர் பெயர் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close