[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தஞ்சையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சிய
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

புதிய மைல்கல்லை எட்டினார் விராத் கோலி

kohli-goes-to-6-000-test-runs

டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் விராத் கோலியும் இணைந்துள்ளார்.

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் சாம் கர்ரன் 78 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டையும் இஷாந்த் சர்மா, ஷமி, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Read Also -> ராகுல், தவான் அவுட்: இங்கிலாந்து மிரட்டல்! 

பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தவானும் கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இருவரும் முறையே, 23, 19 ரன்களில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து புஜாராவும் கோலியும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

21.5 ஓவரில் ஆண்டர்சன் வீசிய பந்தை பவுண்டரிக்கு விளாசினார் விராத் கோலி. அந்த ரன்களுடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். விரைவாக இந்த ரன்களை எட்டிய 2-வது இந்திய வீரர் இவர். 

Read Also -> ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சியம் - ஆரோக்கிய ராஜிவ் பேட்டி

இதற்கு முன்பு, சுனில் கவாஸ்கர் 65 டெஸ்ட் போட்டிகளில் 117 இன்னிங்ஸில் இந்த ரன்களை எடுத்துள்ளார். விராத் கோலி 70 டெஸ்ட் போட் டிகளில் 119 இன்னிங்ஸில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த ரன்களை விரைவாக சேர்த்த இரண்டாவது வீரர் இவர்.
சேவாக், 72 டெஸ்ட்களில், 123 இன்னிங்ஸிலும் ராகுல் டிராவிட் 73 டெஸ்ட்களில் 125 இன்னிங்ஸிலும் சச்சின் 76 டெஸ்ட்களில் 120 இன்னிங் ஸிலும் இந்த ரன்களை எடுத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close