[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

ஓரங்கட்டிய இங்கி. அணிக்கு நிரூபித்துக் காட்டிய கர்ரன்!

wasn-t-trying-to-prove-a-point-curran

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 4 ரன்னில் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் அவுட் ஆனார். பேர்ஸ்டோவை 6 ரன்னில் பும்ரா வெளியேற்ற, குக்கை 17 ரன்னில் பாண்ட்யா அவுட் ஆக்கினார். அதே போல், முந்தைய போட்டியில் இந்திய அணியை மிரட்டிய ஸ்டோக்ஸ், பட்லர் ஜோடியை முகமது ஷமி வெளியேற்றினார். 

இங்கிலாந்து அணி 86 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. இதனால், அந்த அணி 120 ரன்னுக்குள் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மொயின் அலி, சாம் கர்ரன் ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. அந்த அணி 167 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சில் மொயின் அலி 40 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், ரஷித், முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அஸ்வின் வீசிய 69-வது ஓவரில் கர்ரன் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி அரைசதம் அடித்தார். 

இங்கிலாந்து அணி 70 ஓவரில் 8 விக்கெட்இழப்புக்கு 217 ரன் எடுத்தது. பின்னர் பிராட் 17 ரன்னில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய கர்ரன் 78 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.  இதையடுத்து அந்த அணி 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இங்கிலாந்து அணி இந்த கவுரவமான ஸ்கோரை எட்ட, சாம் குர்ரனின் சிறப்பான பேட்டிங்தான் காரணம். முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய குர்ரன், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உட்கார வைக்கப்பட்டார். வோக்ஸுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்தப் போட்டியில், இந்தப் போட்டியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

இதில் சிறப்பாக விளையாடியது பற்றி சாம் கர்ரன் கூறும்போது, ‘ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான இடத்தைப் பிடிக்கவே போராடி வரு கிறார்கள். மூன்றாவது போட்டியில் நான் சேர்க்கப்படாதது பற்றி எனக்கு வருத்தம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக இப்போது மீண்டும் அணியில் இடம்பிடித்துவிட்டேன். நான் என்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதற்காகவும் நான் ஆடவில்லை. நான் எனது இயல் பான ஆட்டத்தை பயமின்றி வெளிப்படுத்தினேன். அணியில் சில சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும்’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close