[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

இங்கிலாந்தில், இந்திய வேகங்களின் ஸ்டிரைக் ரேட்தான் பெஸ்ட்!

india-s-quicks-set-a-new-benchmark-in-england

இங்கிலாந்து மண்ணில் விளையாடிய கிரிக்கெட் அணிகளில், தற்போது விளையாடி வரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் ஸ்டிரைக் ரேட்தான் இதுவரை நடந்த போட்டிகளிலேயே சிறப்பானது என தெரிய வந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. 

Read Also -> ஆசிய கோப்பை கிரிக்கெட்: நாளை வீரர்கள் தேர்வு, புதியவர்களுக்கு வாய்ப்பு!

நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்டனில் நேற்று தொடங்கியது. டாஸ்  வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ் ரன்  எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங் கிய கேப்டன் ஜோ ரூட் 4 ரன்னில் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் அவுட் ஆனார். பேர்ஸ்டோவை 6 ரன்னில் பும்ரா வெளியேற்ற, குக்கை 17 ரன் னில் பாண்ட்யா அவுட் ஆக்கினார்.

Read Aslo -> தங்க மங்கை ஸ்வப்னாவுக்கு பிரத்யேக 'ஷூ' கொடுக்கிறது ஐசிஎப்

அதே போல், முந்தைய போட்டியில் இந்திய அணியை மிரட்டிய ஸ்டோக்ஸ், பட்லர் ஜோடியை முகமது ஷமி வெளியேற்றினார். இங்கிலாந்து அணி 86 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. இதனால், அந்த அணி 120 ரன்னுக்குள் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மொயின் அலி, கர்ரன் ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. அந்த அணி 167 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சில் மொயின் அலி 40 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், ரஷித், முகமது ஷமி பந்துவீச்சில்  ஆட்டமிழந்தார். அஸ்வின் வீசிய 69-வது ஓவரில் கர்ரன் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி அரைசதம் அடித்தார். இங்கிலாந்து அணி  70 ஓவரில் 8 விக்கெட்
இழப்புக்கு 217 ரன் எடுத்தது. பின்னர் பிராட் 17 ரன்னில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய கர்ரன் 78 ரன்னில்  அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

  

இங்கிலாந்து அணி 76.4 ஓவரில் 246 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 3  விக்கெட்கள் சாய்த்தார். முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர். இதனையடுத்து, இந்திய அணி  தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தவானும் கே.எல்.ராகுலும் ஆடி வருகின்றனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்துள்ளது. தவான் 3 ரன்னுடனும் ராகுல் 11 ரன்னுடனும் ஆடிவருகின்றனர்.
 
இந்நிலையில், இந்தத் தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் ஸ்டிரைக் ரேட் 44.2. இதுதான், இங்கிலாந்து மண்ணில் வெளிநாட்டு கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சு ஸ்டிரைக்ட் ரேட். கடந்த நூறுவருட கிரிக்கெட்டில் வரலாற்றில் இதுதான் பெஸ்ட் என்கிறது
புள்ளிவிவரம். அதே நேரம் ஆசியாவுக்கு வெளியே (ஜிம்பாப்வே தொடர் தவிர) இந்திய வேகப்பந்துவீச்சின் சிறந்த ஸ்டிரைக் ரேட்டும் இதுதான்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close