[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

மீண்டும் அதே தவறை செய்யும் விராட் கோலி

india-vs-england-4th-test-in-southampton-day-1-ishant-removes-rashid

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி சவுதாம்டனில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 4 ரன்னில் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் அவுட் ஆனார். பயர்டோவை 6 ரன்னில் பும்ரா வெளியேற்ற, குக்கை 17 ரன்னில் பாண்ட்யா அவுட் ஆக்கினார். 

                          

அதேபோல், முந்தைய போட்டியில் இந்திய அணியை மிரட்டிய ஸ்டோக்ஸ், பட்லர் ஜோடியை முகமது சமி வெளியேற்றினார். இங்கிலாந்து அணி 86 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. இதனால், அந்த அணி 120 ரன்னிற்குள் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மொயின் அலி, கர்ரன் ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதோடு, ரன்களையும் அவ்வவ்போது எடுத்தனர். இதனால், இங்கிலாந்து அணி சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தது. 38.3 ஓவரில் 100 ரன்னும், 53.4 ஓவரில் 150 ரன்னும் இங்கிலாந்து எட்டியது. இந்தக் கூட்டணி சிறப்பாக விளையாடி வந்தது.

இந்த நேரத்தில் தான் இங்கிலாந்து அணி 167 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் பந்து வீச்சில் மொயின் அலி 40 ரன்னில் கேட்சாகி ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டுக்கு பிறகு தான் இந்திய அணி ரிலாக்ஸ் ஆனது. பின்னர், ரஷித் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அஸ்வின் வீசிய 69வது ஓவரில் கர்ரன் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி அரைசதம் அடித்தார். இங்கிலாந்து அணி 70 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 217 ரன் எடுத்து விளையாடி வருகிறது. கர்ரன் 61 ரன் எடுத்து விளையாடி வருகிறார்.

             

ஏற்கனவே மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 62 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால், பட்லர்- ஸ்டோக்ஸ் ஜோடி இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். இந்த ஜோடி 169 ரன்கள் சேர்த்தது. பட்லர் சதம் அடித்தார். அதேபோல், இந்தப் போட்டியில் மொயின் அலி, கர்ரன் ஜோடி விளையாடியது. 100 ரன்னில் இங்கிலாந்து அணியை சுருட்டும் வாய்ப்பு இருந்தும் கேப்டன் விராட் கோலி அதனை தவறவிடுகிறார். அதனால், இங்கிலாந்து அணி 200 ரன்னை தாண்டியுள்ளது. பார்ட்னர்ஷிப் சேரவிடாமல் உடைத்தால் தான் எளிதில் இங்கிலாந்தை சுருட்ட முடியும். இந்திய அணிக்கும் அது சாதகமாக அமையும். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close