[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

'வலி தாங்க முடியாமல் துடித்தேன் தங்கத்தை வென்றேன்' ஸ்வப்னா பர்மன் !

heptathlete-swapna-barman-defeats-pain-barrier-to-make-history

ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஹெப்டத்லான் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 21 வயதான ஸ்வப்னா பர்மன் மொத்தம் 6026 புள்ளிகள் சேர்த்து முதலிடம் பிடித்தார். ‌சவாலாக விளங்கிய சீன வீராங்கனை குயின்லிங்கை விட 64  புள்ளிகள் கூடுலாக பெற்று ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கத்தை தமதாக்கினார். இதன் மூலம் ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் பிரிவில் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

ஆனால் ஸ்வப்னா கடுமையான வலியுடனும் வேதனையுடன்தான் இந்தப் பதக்கத்தை பெற்றார். இதனை தொலைக்காட்சியில் இந்தப் போட்டியில் பார்த்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஸ்வப்னாவின் தாடையில் ஒரு பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருந்தது. இதனை பார்த்த பலரும் ஸ்வப்னாவுக்கு தாடையில் எலும்பு முறிந்ததா ? வேறு என்ன பிரச்சனை அவருக்கு என சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் முன் வைக்கப்பட்டிருந்தது. தங்கப் பதக்கம் வென்றப் பின்பு, செய்தியாளர்களிடம் தாடையில் ஒட்டப்பட்டுள்ள பிளாஸ்திரி குறித்து ஸ்வப்னாவே கூறினார்.

அதில் " போட்டிக்கு முந்தைய நாள் எனக்கு லேசான பல் வலி ஏற்பட்டது. அது மெல்ல மெல்ல போட்டி நடக்கும் நாளில் மிக அதிகமானது. தடகள விளையாட்டு விதிமுறைபடி வலி நிவாரணி மாத்திரைகளோ அலல்து ஊசியோ போட முடியாது. அதில் தடை செய்யப்பட்ட ஊக்கு மருந்துகள் இருக்கலாம். போட்டி நெருங்க நெருங்க வலியும் அதிகமானது. ஆனாலும், நாட்டுக்காக தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னை நானே தேற்றிக்கொண்டு தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டன். போட்டியின் போது பல் வலி அதிகரிக்காமல் இருக்க. என் தாடையை இறுக்கமாக்கவே பிளாஸ்திரி ஒட்டப்பட்டது. நான் ஏற்கெனவே இடது கால் மூட்டு வலிக்கு சிகிச்சை எடுத்து வருகிறேன். இந்த வலியையும் தாண்டி நாட்டுக்காக தங்ப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார் ஸ்வப்னா பர்மன்.

ஸ்வப்னாவுக்கு முன்பு உலகளவில் நடைபெற்ற தடகளப் பிரிவு ஹெப்டத்லான் போட்டியில் இந்தியா சார்பிவ் சோமா பிஸ்வாஸ் 2002 மற்றும் 2006 ஆம் ஆண்டு பூசான், தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2010 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பிரமிளா ஐயப்பா வெண்கலுமும் வென்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 தங்கப்பதக்கங்களுக்கு மேல் வென்றுள்ள சீன அணி பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் வீற்றிருக்கிறது. ஜப்பான், தென்கொரியா, ‌இந்தோனேஷியா ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 11 தங்கம் உட்பட 54 பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணி பதக்கப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close