[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

4-வது டெஸ்ட்: அஸ்வின் டவுட், ஜடேஜாவுக்கு வாய்ப்பு!

r-ashwin-still-in-doubt-for-4th-test

அஸ்வின் காயமடைந்துள்ளதால் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்றும் அவருக்குப் பதிலாக ஜடேஜா களமிறங் குவார் எனவும் தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நான்காவது டெஸ்ட் போட்டி சவுதாம்டனில் நாளை நடக்கிறது. இந்தப் போட்டியில் காயம் அடைந்துள்ள சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

Read Aslo -> 4வது டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கிறார் ஆண்டர்சன்


இங்கிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன்பு எஸ்செக்ஸ் அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தின்போதே அஸ்வின் வலது கையில் காயம டைந்திருந்தார். காயம் பெரிதாகிவிடக் கூடாது என்பதற்காக பயிற்சி ஆட்டத்தில் அவர் ஈடுபடவில்லை.

பின்னர் குணமாகி ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் காயத்துடனேயே ஆடினார். அவர் வலியில் தவிப்பதையும் பார்க்க முடிந்தது. இதனால் அவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆடுவாரா என்பது கேள்விக் குறியானது.

Read Also -> கெட்டில் பெல்லில் ஆசிய அளவில் தங்கம் வென்ற தமிழக வீரர் 

இதுபற்றி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ‘அடுத்த போட்டிக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அதற்குள் அவர் குணமாகிவிடுவார் என்று நம்புகி றோம். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் நேற்று முன் தினத்தில் இருந்து இந்திய அணி வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. திங்கட்கிழமை அஸ்வின் பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் அவர் காயம் அதிகரித்திருக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் நேற்று பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டார்.

இருந்தாலும் அவர் நான்காவது போட்டியில் ஆடுவது சந்தேகமே. அஸ்வின் முழுமையாக குணமாகவில்லை என்றால் அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா களமிறங்குவார். அணியில் புதிதாக இணைந்துள்ள பிருத்வி ஷா, ஹனுமா விஹாரி ஆகியோரும் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close