[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: ஆப்கான் வெற்றி!

afghanistan-won-by-29-runs

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் வீரர்கள் களமிறங்கினர். அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் குல்பதின் நைப் 64 ரன்களையும் ஹஷ்முல்லா ஷாகிதி 54 ரன்னையும் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் முர்டாக் 4 விக்கெட்டுகளையும் ரான்கின் 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் 228 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி 48.3 ஓவர்களில் 198 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகப்பட்சமாக ஆண்டி பார்ல்பிர்னி 55 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், முமகது நபி, அப்தாப் ஆலம் தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close