[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

மறக்க முடியாத டான் பிராட்மேனை கெளரவித்த கூகுள் !

google-doodle-honors-don-bradman-on-110th-birth-anniversary

கிரிக்கெட் உலகு வரலாற்றில் பல சிறந்த வீரர்களை உருவாக்கியிருந்தாலும் அதில் மறக்க முடியாத வீரர்கள் பலர் இருக்கின்றனர். அதில் மிக முக்கியமானவர் முதன்மையானவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன். கிரிக்கெட்டின் பெரும் சாதனையாளரான டான் பிராட்மேனின் சாதனை இன்று வரைக் கூட யாராலும் நெருங்க முடியவில்லை. 1928 ஆம் ஆண்டில் இவர் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய பிராட்மேன் ஏறக்குறைய 20 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் முதல் முதலில் ஒரே நாளில் 309 ரன்கள் அடித்த பெருமை பிராட்மேனையே சேரும். பிராட்மேன் காலக்கட்டத்தில் 20 ஆண்டுகளில் வெறும் 50 டெஸ்ட் போட்டிகளே விளையாடப்பட்டன. அவற்றுள் இங்கிலாந்து அணியுடன் மட்டும் 37 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 6,996 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி பிரமிக்கவைக்கும் வகையில் 99.96 ஆக உள்ளது. இந்தச் சாதனையை இப்போதும் கூட அதாவது பிராட்மேனின் பேட்டிங் சராசரியை யாராலும் இன்னும் நெருங்கக் கூட முடியவில்லை.

டான் பிராட்மேன்  29 சதங்களும், 13 அரைசதங்களும் அடித்துள்ளார். அவர் தன்னுடைய ரன் சராசரியை 99.96 இல் இருந்து 100 ஆகி மாற்றியிருக்கலாம். ஆனால் 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டி நடைபெற்றது. பிராட்மேன் தன்னுடைய ஓய்வை ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஓவல் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் நான்கு ரன்கள் மட்டும் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட் சராசரியில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைக்க டான் பிராட்மனுக்கு வாய்ப்பு கிடைத்தது. 

பேட்டிங் செய்ய ஆடுகளத்துக்கு வந்த பிராட்மேனுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் எரிக் ஹோலிஸ் டான் பிராட்மனுக்கு பந்தை வீசினார். அதில் பிராட்மேன் ரன் அடிக்கவில்லை. ஆனால், இரண்டாவது பந்தில் டான் பிராட்மேன் அவுட்டானார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றார் பிராட்மேன்.இந்திய அணி 1998-1999 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அந்தத் தொடரின் போது டான் பிராட்மன் தனது 90வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸி வீரர் ஷேன் வார்னே ஆகிய இருவரையும் டான் பிராட்மனின் பிறந்தநாளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

அப்போது பேசிய டான் பிராட்மேன் "சச்சினின் ஆட்டத்தை பார்க்கும்போது அதில் என்னையே பார்ப்பது போல உள்ளது" என்று புகழாராம் சூட்டினார். காலத்தால் வெல்ல முடியாத ஜாம்பவான் டான் பிராட்மேன் தன்னுடைய 93 ஆவது வயதில் 2001 ஆம் ஆண்டு காலமானார். அத்தகைய பெருமைக்குறிய வீரரின் 110-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை கூகுள் கெளரவிக்கும் வகையில் சிறப்பு டூடுல் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close