[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

இந்திய ஏ அணியை காப்பாற்றிய ராயுடு, ’பி’யை மீட்ட மனீஷ் பாண்டே!

pandey-rayudu-ensure-india-b-a-wins-over-south-africa-a-aus

தென்னாப்பிரிக்க ஏ கிரிக்கெட் அணி மற்றும் ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலிய ஏ அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய ஏ அணி, 31.4 ஓவர்களில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட் டையும் இழந்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் ஆஸ்டன் அகர் 34 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்ட மிழந்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும் கிருஷ்ணப்பா கவுதம் 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இந்திய ஏ அணி, 38.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிடில் ஆர்டரில் களமிறங்கிய அம்பத்தி ராயுடு அபாரமாக ஆடி 62 ரன்கள் சேர்த்தார். குணால் பாண்ட்யா 49 ரன்கள் எடுத்தார்.

தென்னாப்பிரிக்க ஏ அணியுடனான மற்றொரு போட்டியில் இந்திய பி அணி நேற்று மோதியது. பெங்களூர் அருகே உள்ள அலூரில் இப்போட்டி நடந்தது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க ஏ அணி, 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 231 ரன்கள் எடுத்தது. ஆல்ரவுண்டர் முத்துசாமி 55 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய இந்திய பி அணி 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிகப்பட்சமாக மனீஷ் பாண்டே 95 ரன்களும்  சுப்மான் கில் 42 ரன்களும் எடுத்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close