[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
  • BREAKING-NEWS “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது
  • BREAKING-NEWS “ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி

ஐபிஎல் தொடங்கி 9 ஆண்டுகளில் முதல் போட்டியை மிஸ் செய்யும் ரெய்னா

landmark-beckons-but-suresh-raina-will-miss-first-ipl-match-in-nine-years

ஐபிஎல் தொடரின் கடந்த 9 ஆண்டுகளில் சுரேஷ் ரெய்னா முதல்முறையாக, ஒரு போட்டியில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா, அந்த அணிக்காக ஒரு போட்டியைக் கூட மிஸ் செய்யாமல் ஆடி வந்தார். ஊழல் குற்றச்சாட்டால் சென்னை அணிக்குத் தடை விதிக்கப்பட்ட பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டார். அந்த அணிக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் ரெய்னா பங்கேற்றார்.

இந்த நிலையில், சுரேஷ் ரெய்னாவின் கர்ப்பிணி மனைவி குழந்தை பேறுக்காக நெதர்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் அவர் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை எட்ட சுரேஷ் ரெய்னாவுக்கு 15 ரன்களே தேவை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close