[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

அசத்தினார் பாண்ட்யா, அடங்கியது இங்கிலாந்து!

india-in-total-command-after-pandya-s-five-wicket

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் அபார பந்துவீச்சால் இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. லார்ட்ஸில் நடந்த 2 வது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை தழுவி, தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. 

மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேப்டன் விராத் கோலி 97, ரகானே 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், ஆண்டர்சன், பிராட் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். 

Read Also -> பிராவோ சகோதரர்கள் அதிரடி: த்ரில் வெற்றி பெற்றது நைட் ரைடர்ஸ்! 

Read Also -> ’கபில்தேவோட நானா ஒப்பிட சொன்னேன்?’ ஹர்பஜனை விளாசிய ஹர்திக் பாண்ட்யா! 

Read Also -> பாண்ட்யா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து - ‘161’க்கு ஆல் அவுட்

இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடங்க வீரர்களாக அலைஸ்டர் குக்கும் ஜென்னிங்ஸும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 9.4 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 54 ரன்கள் எடுத்த நிலையில், குக் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். இஷாந்த் சர்மா வீசிய 12வது ஓவரின் கடைசி பந்தில் குக் ஆட்டமிழக்க, அடுத்து பும்ரா வீசிய ஓவரின் முதல் பந்தில் ஜென்னிங்ஸ் 20 ரன்னில் நடையை கட்டினார். அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட் வீழ்ந்தது. பின்னர், சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. 

ஒரு கட்டத்தில், ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 128 ரன்னிற்கு இங்கிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்தது. ரூட், பெர்ஸ்டோவ் உள்ளிட்ட முக்கிய விக்கெட்களை பாண்ட்யா சாய்த்தார். இதனால், இங்கிலாந்து அணி 140 ரன்னுக்குள் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் பட்லர் தாக்குப் பிடித்து 39 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

Read Also -> 329க்கு இந்தியா ஆல் அவுட் - ரிஷப் பன்ட் ஏமாற்றம்  

Read Also -> கிரிக்கெட்டில் இருந்து ஆஸி.வேகம் ஜான்சன் ஓய்வு

இதையடுத்து இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹர்திக் பாண்ட்யா 6 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்கள் சாய்த்தார். டெஸ்ட் போட்டியில் அவர் 5 விக்கெட்கள் சாய்ப்பது இதுவே முதல் முறை. பும்ரா, இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் முகமது ஷமி ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். 

இந்திய அணி, 168 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. 

தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், தவான் களமிறங்கினர். இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து ஆடினர். கே.எல்.ராகுல் பவுண்டரி களாக விளாசினார். ஒருநாள் போட்டியைப் போல் விளையாடினார். இதனால், இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ராகுல், 36 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து புஜார வந்தார். இவரும் அடித்து ஆடினார்.

ஷிகர் தவான் 44 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் வீசிய பந்தை இறங்கி வந்து அடிக்க முயற்சித்தார். தேவையில்லாத அந்த முயற்சியில் பந்து, கீப்பர் பேர்ஸ்டோவ் கைக்கு செல்ல, அவர் எளிதாக ஸ்டம்பிங் செய்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 33 ரன்களுடனும் விராத் 8 ரன்களுடன் களத்தில் உள்ளனர். மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close