[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.

இந்திய அணி பேட்டிங் - ரிஷப் பண்ட் உள்ளே..தினேஷ் கார்த்திக் வெளியே

rishabh-will-make-his-test-debut-today-against-england

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. 2 வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதிலும் இந்திய அணி தோல்வியை தழுவி, தொடரில் 0–2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியுள்ளது. நாட்டிங்காமில் தொடங்கியுள்ள இந்த டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. டாஸ்க்கு பின்னர் பேசிய விராட் கோலி, ‘நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். முதலில் விளையாடி ரன்களை குவிக்க வேண்டும். அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

குல்தீப் யாதவுக்குப் பதிலாக இம்முறை பும்ரா களமிறங்குகிறார். அதேபோல், விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார். தொடக்க வீரராக கே.எல்.ராகுலுடன் முரளி விஜய்க்கு பதிலாக ஷிகர் தவான் இறங்குகிறார். இந்த மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் மற்றும் ரகானேவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தவான் உள்ளே       - முரளி விஜய் வெளியே
ரிஷப் பண்ட் உள்ளே  - தினேஷ் கார்த்திக் வெளியே
பும்ரா உள்ளே        - குல்தீப் வெளியே

        

‘நம்பர் ஒன்’ டெஸ்ட் அணியான இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் போராட்டமே இல்லாமல் சரணடைந்ததால், அணி மீது கடுமையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ’இரண்டாவது டெஸ்ட் தோல்விக்கு வீரர்கள் தேர்வில் செய்த தவறுதான் காரணம்’ என்று இந்திய கேப்ட ன் விராத் கோலி வெளிப்படையாகக் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அதிரடியாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close