[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

இந்தியா-பாக். கிரிக்கெட்: எதிர்ப்பை மீறி திட்டமிட்டபடியே போட்டி!

india-pak-game-date-will-not-change-in-asia-cup

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, திட்டமிடப்பட்ட அட்டவணைப் படியே நடக்கிறது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் 14- வது போட்டிக்கான அட்டவணையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் இந்தப் போட்டியில் முதல் போட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி 28-ம் தேதி நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கின்றன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும். முதல் போட்டியில் இலங்கை அணியும், பங்களாதேஷும் மோது கின்றன. 

செப்டம்பர் 19-ம் தேதி இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். அதற்கு முந்தைய நாள் தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் இந்திய அணி, ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல் அடுத்த நாளே பாகிஸ்தான் அணியுடன் விளையாட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு இரண்டு நாள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அட்டவணைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையும் படிங்க:இன்று 3-வது டெஸ்ட்: ரிஷப் பன்ட்டுக்கு வாய்ப்பு

பாகிஸ்தானுக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு, இந்தியாவுக்கு கொடுக்காமல் மறுநாளே விளையாட வைப்பது என்ன நியாயம்? இந்த அட்டவணை, முட்டாள்தனமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த தேதியை மாற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் உட்பட பலர், இந்த போட்டியில் இந்தியா விளையாடக் கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.

அவர், இது தொடர்பாக கூறும்போது, “அட்டவணையை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இது சரியான அட்டவணை என்று நினைக்கவில்லை. ஒரு போட்டி விளையாடி முடித்த பிறகு ஒரு வீரர் மீண்டும் உடல் தகுதி பெற, குறைந்தபட்சம் 48 மணி நேரம் தேவைப்படுகிறது. ஏனெனில் ஒரு வீரர் மூன்றரை மணி நேரம் பீல்டிங் செய்கிறார். அதோடு ஒரு பேட்ஸ்மேன் இரண்டு மணி நேரம் விளையாடினால் மொத்தம் ஐந்தரை மணி நேரம் ஆகிறது. அதனால், உடல் தகுதி பெற 24 முதல் 48 மணி நேரம் வரை தேவைப்படும். ஆசியக் கோப்பையில் இந்தியாவின் அட்டவணையை பிசிசிஐ மாற்றி அமைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

ஆனால் எந்த வித மாற்றமும் இல்லாமல் ஆசிய கோப்பைப் போட்டி திட்டமிடப்பட்ட அட்டவணைப்படியே நடக்கிறது. இதற்கான ஒப்பந்தந்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய தலைவரும் அபுதாபி அமைச்சருமான சேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியும் நேற்று கையெழுத்திட்டனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close