[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

விசாரணை வளையத்தில் கோலி, சாஸ்திரி ?

india-vs-england-shastri-kohli-duo-might-face-bcci-questions-for-debacle-in-england

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சோதனைகளை சந்தித்து வருகிறது. இந்தியா முதல் டெஸ்ட்டில் போராடி தோற்றது. ஆனால் புகழ்மிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படு தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து இந்திய அணியை பல்வேறு ஊடகங்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் இன்னிங்ஸ் தோல்வி குறித்து கேப்டன் விராத் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் விசாரணை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறும் முக்கியமான குற்றச்சாட்டு இந்திய அணியின் போராட்டக் குணம்தான். ஆம், இங்கிலாந்து பவுலர்களிடம் முழுமையாக சரணடைந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் இதுவரை பார்த்ததில்லை என பலரும் வசைபாடி வருகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரை கோலி மற்றும் அஸ்வின் தவிர மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பலோ சொதப்பலாக ஆடி வருகின்றனர். இந்தப் போட்டியில் ரஹானே ஓரளவுக்கு ஏனும் நிலைத்து ஆட முயன்றார். புஜாரா பூஜ்ஜியம் ஆனார், தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். 

இந்நிலையில் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேள்வி எழுப்ப பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற என்ன உத்தி, வியூகம் கடைபிடிக்கப் போகிறீர்கள். அணி வீரர்கள் தேர்வில் கோலி, சாஸ்திரிக்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ள நிலையில் 2 டெஸ்ட் தோல்வியால் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட உள்ளது. தொடரில் தோல்வியுற்றால் இருவருக்கும் தரப்பட்டுள்ள அதிகாரம் குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார், அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதில் அவர் " கோலி ரவி சாஸ்திரியிடம் கேட்டுவிட்டுதான் போட்டி தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த முறை தென்னாப்பிரிக்க அணியிடம் டெஸ்ட் தொடரை தோற்றபோது ஒவ்வொரு ஆட்டத்துக்கும் போதிய அவகாசம் இல்லை என கூறினர். ஆனால், இங்கிலாந்து தோல்விக்கு அவ்வாறு புகார் கூற முடியாது. ஏற்கெனவே சாஸ்திரி பயிற்சியில் 2014-15-இல் 0-2 ஆஸ்திரேலியாவிலும், 2017-18-இல் தென்னாப்பிரிக்காவில் 1-2 என தோல்வி அடைந்தோம். தற்போது இங்கிலாந்தில் இக்கட்டான நிலையில் உள்ளோம். பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் செயல்பாடுகளும் கேள்விக்குறியாக உள்ளன" என கூறியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close