[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதையே திமுக பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி
  • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் நாளை முதல்வர் குமாரசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS ஈரோடு மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

“சின்னபுள்ளைங்களோட விளையாடுகிற மாதிரி இருக்கு” - இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

england-india-test-series-is-men-against-boys-says-nasser-hussain

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தது சற்றே ஆறுதலாக இருந்தது. ஆனால், லாட்ஸ் போட்டியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. கோலி உட்பட அனைத்து வீரர்களும் சொதப்பினார்கள். முதல் இன்னிங்சில் 107, 2வது இன்னிங்சில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இரண்டு இன்னிங்சில் அஸ்வின்தான்(29, 33) அதிக ஸ்கோர் அடித்தார். இதனால், இந்திய வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. 

இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாஸர் ஹுசைன் கருத்து தெரிவித்துள்ளார். ஹுசைன் கூறுகையில், “டெஸ்ட் தரவரிசையில் உலக அளவில் முன்னிலையில் இருக்கும் இந்திய அணி இன்னும் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்த்தேன். இந்தச் சூழலில் இங்கிலாந்து அணிதான் உலகிலேயே சிறந்தது. ஆனால், இந்தியாவின் தோல்வியை பற்றிதான் குறிப்பிட வேண்டியுள்ளது. இந்திய அணி முற்றிலும் தோல்வி அடைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

இந்திய அணி உலகின் நெம்பர் ஒன்னாக உள்ளது. அப்படியென்றால் இந்தத் தொடர் மிகவும் போட்டி நிறைந்ததாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது சிறுவர்களுக்கும், தேர்ந்த இளைஞர்களுக்கும் இடையிலான போட்டியை போல் உள்ளது. அவர்களுடைய வளைவு தவறான திசையில் சென்று கொண்டிருக்கிறது. 

“விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. பேட்டிங்கில் விராட், அஸ்வின் மட்டுமே சிறப்பாக விளையாடியுள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து சொதப்புகிறார்கள். இரு அணிகளுக்கும் இடையே பயிற்சி ஆட்டம் இல்லை. இந்திய அணியின் ட்ரெஸ்சிங் அறையில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை விளையாட வைக்க வேண்டும்” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close