[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

லார்ட்ஸ் மைதானத்தில் தமிழக வீரர்கள் எப்படி?

tamil-cricketers-performances-at-lords

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. மழை காரணமாக, டாஸ் போடப்படாமல் முதல் நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்குள் சுருண்டது. இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் டுகளை சாய்த்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 7 விக்கெட்டுக்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பேர்ஸ்டோவ் (93), வோக்ஸ் (137) ஆகியோர் சிறப்பாக ஆடினார்.

(அஸ்வின்)

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 130 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.

(முரளி விஜய்)

இந்த டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர்களில் அஸ்வின் மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக் கெட்டும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார். லார்ட்ஸ் போட்டியிலும் அவர்தான், இந்திய அணியின் மானத்தை ஓரளவு காத்தார். இரண்டு இன்னிங்சிலும் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தவர் அவர்தான். முதல் இன்னிங்சில் 29 ரன்கள். இரண்டாவது இன்னிங்ஸில் 33 ரன்கள். 8-வது மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி இரு இன்னிங்சிலும் டாப் ஸ்கோரை பெற்ற முதல் இந்தியர் அஸ்வின்தான்.

மற்றொரு தமிழக வீரர் முரளி விஜய் இரண்டு இன்னிங்சிலும் டக்-அவுட் ஆகி ஷாக் கொடுத்தார். ஒரே டெஸ்டில், இரண்டு இன்னிங்சிலும் இந்திய ஓபனிங் பேட்ஸ்மேன் ஒருவர் டக்-அவுட் ஆவது இது 6-வது முறையாம்! இவர், முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 20 ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன்னும் எடுத்திருந்தார்.

(தினேஷ் கார்த்திக்)

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக், இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஒரு ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் ஆகியும் பெருமை சேர்த்துள்ளார். முதல் போட்டியில், முதல் இன்னிங்ஸில் டக் அவுட். இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்கள் எடுத்தார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close