[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

லார்ட்ஸில் அவுட் ஆனாலும் விராத் கோலிதான் டாப்!

virat-kohli-tops-list-of-highest-run-getters-in-2018

இந்த வருடத்தில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் விராத் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தோற்ற இந்திய அணி, இரண்டாது போட்டியில் இப்போது விளையாடி வருகிறது. புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டி மழைகாரணமாக தடைபட்டுள்ளது. முதல் நாள் போட்டி ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்தானது.

இரண்டாவது நாள் போட்டியின்போது அவ்வப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதில் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 107 ரன்னுக்கு சுருண்டது. மழை காரணமாக ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியதால், இந்திய அணி தடுமாறி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 

இந்தப் போட்டியில் கேப்டன் விராத் கோலி 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதையடுத்து இந்த வருடம் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் விராத் கோலி முதலிடத்தில் உள்ளார். இந்த வருடம் இப்போது வரை, அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டியிலும் சேர்த்து அவர், 1404 ரன்கள் எடுத்துள்ளார்.

அவரை அடுத்து இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 1389 ரன்களும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 1338 ரன்களும் எடுத்துள்ளனர். பாகிஸ் தான் தொடக்க வீரர் பஹார் ஜமான் 1181 ரன்களும் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் 1055 ரன்களும் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள் ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close