[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

’ஸ்டோக்ஸ் என்னை கொன்றாலும் கொன்றிருக்கலாம்’: விசாரணையில் திடுக்!

stokes-could-have-killed-me-claims-defendant

கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ், என்னை கொன்றாலும் கொன்றிருக்கலாம்’ என்று அவரால் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் கூறியுள் ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து அன்று இரவு நைட் கிளப் ஒன்றுக்கு சென்றார் பென் ஸ்டோக்ஸ். அங்கு ரியான் ஹாலே, ரியான் அலி ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஹாலே முன்னாள் ராணுவ வீரர். தகராறு முற்றி ஸ்டோக்ஸ் அவர்களை கடுமையாக தாக்கினார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பான விசாரணை கடந்த திங்கட்கிழமை முதல் நடந்து வருகிறது. இதனால் இங்கிலாந்து அணியில் இருந்து விலகியுள்ள ஸ்டோக்ஸ், நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். விசாரணையின்போது, நைட்கிளப்பில் இருந்து ஸ்டோக்ஸ், 12.46 மணிக்கு வெளியே வந்து விட்டு பிறகு தனது நண்பர் ஹேல்ஸுடன் மீண்டும் கிளப்பிற்கு சென்றுள்ளார். அப்போது கிளப் மூடப்பட்டதால் உள்ளே அனுமதிக் கப்பட வில்லை. அப்போது அங்கிருந்த இருவரை ஸ்டோக்ஸ் கிண்டலாக பேசினாராம். இதை அலியும் ரியான் ஹாலே வும் எதிர்த்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டோக்ஸ் அவர்களை தாக்கியுள்ளார் என்பது தெரிய வந்தது.

போலீஸாரிடம் ரியான் ஹாலே அளித்த சாட்சியம், நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. அதில், ’அந்த நேரத்தில் ஸ்டோக்ஸ் என்னை கொன்றாலும் கொன்றிருப்பார்’ என்று கூறியுள்ளார். ‘நான் ஒரு தந்தை. என்னை கொன்றாலும் கொன்றிருப்பார். எப்படி விட்டார் என்று தெரிய வில்லை. தவறே செய்யாதவர்கள் மீது சிலர் இப்படி செய்வது அதிர்ச்சியாக இருந்தது’ என்றார். இதையடுத்து ஹாலே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ், ‘நான் செய்தது அனைத்தும் தற்காப்புக்காகத்தான். தாக்க வேண்டும் என்று செய்யவில்லை. சம்பவம் நடந்த போது நான் குடிக்கவும் இல்லை’ என்று கூறியுள்ளார்.   

விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close