[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

'இந்தியாக்கு சான்ஸ் இல்லை பாகிஸ்தான் தான் ஜெயிக்கும்' முகமது யூசூஃப் கணிப்பு

yousuf-pakistan-are-favourites-for-cricket-world-cup-2019

இங்கிலாந்தில் அடுத்தாண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் விளையாடி உலகக் கோப்பையை கைபற்றுவதற்கான பயிற்சிகளை அனைத்து அணிகளும் தொடங்கிவிட்டன. இந்திய அணி கூட இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசூஃப் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் கோப்பையை கைபற்றும் தகுதி பாகிஸ்தான் அணிக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப் பெட்டியில் முகமது யூசுஃப் " பாகிஸ்தான் ஏன் வெல்லும் என்றால் அதற்கு காரணங்கள் இருக்கிறது. இப்போதுள்ள அணிகளில் பாகிஸ்தானுக்கு மட்டுமே பேட்டிங் பவுலிங் சரிவிகிதத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் மிகப் பெரிய பலம் அதன் பந்துவீச்சாளர்கள். பார்ட் டைம் பந்து வீச்சாளர்கள் இல்லாத அணி. மேலும் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற மைதானங்கள் இங்கிலாந்தில் இருப்பதால் எதிரணியின் விக்கெட்டை எளிதாக எடுப்பார்கள் பாகிஸ்தான் வீரர்கள்" என கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு யூசூஃப் யுஹானாவாக அறிமுகமானவர்தான் முகமது யூசூஃப். முதலில் கிறிஸ்தவரான இவர் பாகிஸ்தான் அணியில் நிலையான இடம்பிடித்த பின்பு, இஸ்லாத்துக்கு மாறினார். இதன் காரணமாகவே தனது பெயரையும் மாற்றிக்கொண்டார். முகமது யூசூஃப் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக பாகி்ஸ்தானுக்கு இருந்தார். ஒருநாள் போட்டிகளில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்தவர்.

இந்தியாதான் உலகக் கோப்பையை வெல்லும் என கூறப்படுகிறதே என அவரிடம் கேட்டதற்கு, அதற்கு பதில் கொடுத்த முகமுது யூசூஃப் "இந்தியா நம்பர் ஒன் அணியாக இருக்கலாம். உலகின் மிகச் சிறந்த பேட்டிங் வரிசையை கொண்ட அணியாக இருக்கலாம், ஆனால் இந்திய அணியின் பவுலிங் நம்பிக்கை தரக் கூடிய வகையில் இல்லை. அதனால் கஷ்டம்தான்" என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close