[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

வரலாற்று சிறப்புமிக்க 'லார்ட்ஸ்' மைதானத்தில் வெற்றி பெறுமா இந்தியா ?

india-likely-to-play-two-spinners-england-to-give-debut-to-pope-at-lord-s

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகப் புகழப்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதனையடுத்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

இந்தப் போட்டியில் இந்தியா போராடி தோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களில் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடினார். பந்து வீச்சாளர்களில் இஷாந்த் சர்மா, அஸ்வின், சமி ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இங்கிலாந்தை பொருத்தவரை பேட்டிங்கில் சொதப்பிதான் வருகிறார்கள். ஆனால் அந்த அணியில் அனுபவம் வாய்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், பிராட், குரன் ஆகியோர் அசாத்தியமாக பவுலிங் செய்து விக்கெட்டுகளை எடுத்து வருகின்றனர்.

எனவே, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இன்றைய போட்டியில் இரண்டு ஸ்பின்னர்களை கொண்டு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி  "பொதுவாக அணியில் ஆல்ரவுண்டர்கள் பந்து வீசுகின்றனர். சிறப்பான பேட்டிங்கையும் வெளிப்படுத்துகின்றனர். இருப்பினும் விக்கெட்டுகள் விழுவதில் கடினமான சூழல் ஏற்படும்போது சுழல் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். அவர்களின் தேவை மிகவும் முக்கியமானது. தற்போது ஒரு சுழல் பந்து வீச்சாளர் உள்ளார். அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்காக, வேகப்பந்துவீச்சாளர்களில் உமேஷ் யாதவ் வெளியேற்றப்படலாம் எனத் தெரிகிறது. சுழற் பந்துவீச்சாளர்களில் அஸ்வினுடன், ரவீந்திர ஜடேஜா அல்லது  குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படலாம். இதில், 2014-இல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலுமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜடேஜா, 2-ஆவது இன்னிங்ஸில் 68 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.அதேவேளையில், குல்தீப் யாதவின் பந்து வீச்சை எதிர்கொள்ள இங்கிலாந்து வீரர்கள் ஏற்கெனவே டி20, ஒரு நாள் போட்டிகளில் தடுமாறியதால் அவரை அணியில் சேர்ப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. 

இங்கிலாந்து அணியைப் பொருத்த வரையில், டேவிட் மலான் அணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸ் வழக்கு விசாரணை காரணமாக இப்போட்டியில் இடம்பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர் ஆலிவர் போப், முதல் முறையாக சர்வதேச போட்டியில் களம் காண்கிறார். பென் ஸ்டோக்ஸுக்குப் பதிலாக, மொயின் அலி அல்லது கிறிஸ் வோக்ஸ் பிளேயிங் லெவனில் ஆடவுள்ளனர். இதனையடுத்து இன்று தொடங்கும் இரு அணிகளுக்கு இடையிலான போட்டி சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close