[X] Close
JUST IN
  • BREAKING-NEWS என் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் வருகிறது; சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - பொன்.மாணிக்கவேல்
  • BREAKING-NEWS பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக முறையீடு
  • BREAKING-NEWS ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

இங்கிலாந்தில் விராத் கோலி மற்றொரு சாதனை!

virat-kohli-adds-another-feather-to-his-cap

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆயிரம் ரன்களை எடுத்துள்ள 13 வது இந்திய வீரர் என்ற பெருமையை விராத் கோலி பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.

இதன் முதல் இன்னிங்சில் விராத் கோலி 23 ரன்னை எடுத்தபோது, இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 1,000 ரன்களை எட்டிய 13 வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இங்கிலாந்துக்கு எதிராக 15 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் விராத்,   இந்திய மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டியில் விளையாடி 3 சதம், 2 அரைசதம் உள்பட 843 ரன்கள் குவித்துள்ளார். 

ஆனால் இங்கிலாந்து மண்ணில் கடந்த 2014 ஆம் வருடம் 5 டெஸ்ட் போட்டியில் விளையாடி வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டு இருக்கும்
விராத் கோலி இங்கிலாந்து மண்ணில் அவ்வாறு செயல்படவில்லை. நேற்றைய போட்டியில், சதம் அடித்து முறியடித்துள்ள விராத் கோலி, இந்த தொடரின் மற்றப் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தெண்டுல்கர் (2,535 ரன்கள்) முதலிடத்தில் இருக்கிறார். அடுத்து சுனில் கவாஸ்கர் (2,483), டிராவிட் (1,950), விஸ்வநாத் (1,880), வெங்சர்க்கார் (1,589), கபில்தேவ் (1,355), அசாருதீன் (1,278), விஜய் மஞ்ச்ரேகர் (1,181), தோனி (1,157), பரூக் என்ஜினீயர் (1,113), புஜாரா (1,061), ரவிசாஸ்திரி (1,026) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் விராத் கோலி இப்போது இணைந்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close