[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

இங்கி.கேப்டனுக்கு கிண்டலை திருப்பிக் கொடுத்த விராத்!

virat-kohli-celebration-after-joe-root-run-out-cool

வாங்கியதைத் திருப்பிக்கொடுக்கும் பழக்கம் விராத் கோலிக்கு அதிகம் போல. ஒரு முறை விராத்தை கிண்டல் செய்தால், நேரம் வரும்போது சரியாக அதை ரிட்டர்ன் செய்வதில் வல்லவர் அவர். நேற்றைய போட்டியிலும் நடந்தது அப்படியொரு சம்பவம்!

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பர்மிங்ஹாமில் நேற்று தொடங்கியது. இது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆயிரமாவது டெஸ்ட் போட்டி. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்ட நேர முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஜோ ரூட் 80 ரன்களும் பேர்ஸ்டோவ் 70 ரன்களும் எடுத்தனர்.  நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரூட், 63 வது ஓவரில் இரண்டாவது ரன் னுக்கு ஆசைப்பட்டு ஓடினார். அப்போது ஸ்டம்பில் பந்தை துல்லியமாக வீசி ரன் அவுட் ஆக்கினார் விராத் கோலி. 

இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் போது, சதமடித்த ஜோ ரூட், பேட்டை கீழே போட்டுவிட்டு, ’ஊதிட்டோம்ல’ என்பது போல கிண் டலாகச் செய்கை செய்தார். அதற்கு நேற்று பதிலடி கொடுத்தார் விராத். ரூட், ரன் அவுட் ஆகி வெளியே போகும்போது, கோலியும் அவரை போலவே பேட்டை மேலிருந்து கீழே போடுவது போல செய்கை காட்டினார். பின்னர் உதட்டின் மீது கை வைத்து ’மூச்!’ என்று காட்டினார்.

ஒரு நாள் போட்டியில் ஜோ ரூட் செய்த கிண்டலுக்கு நேற்று பதில் கிண்டல் செய்து பழி தீர்த்துக்கொண்டார் கோலி. இதை இங்கிலாந்து பத்திரிகைகள் சுவாரஸ்ய செய்தியாக வெளியிட்டுள்ளன. 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close