[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

‘மாமா.. அப்படியே போடு’ இங்கிலாந்து மண்ணில் தமிழில் அசத்திய தினேஷ், அஸ்வின்..!

india-vs-england-first-test-ashwin-and-dinesh-karthik-spoke-in-tamil

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் தமிழில் பேசிக்கொண்ட வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியாவும், ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இவ்விரு அணிகள் மோதும் 5-டெஸ்ட் கொண்ட தொடர் நேற்று தொடங்கின. பர்மிங் ஹாமில் தொடங்கிய இப்போட்டியில் இந்திய அணியில் யாரும் எதிர்பாராவண்ணம் புஜாரா நீக்கப்பட்டு அண்மைகாலமாக சிறப்பாக விளையாடி வரும் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்தெடுத்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக  அலைஸ்டர் குக்கும், ஜென்னிங்சும் களமிறங்கினர்.  அணியின் ஸ்கோர் 26 ரன்களாக இருந்தபோது அஸ்வின் வீசிய 8-வது ஓவரின் 5-வது பந்தில் அலைஸ்டர் குக் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து ஜென்னிங்சுடன், கேப்டன் ரூட் இணைந்தார். இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடி வந்தது. அப்போது 16-வது ஓவரை தமிழக வீரர் அஸ்வின் பந்து வீச வர, எதிர்திசையில் ஜென்னிங்ஸ் பேட்டிங் செய்துக் கொண்டியிருந்தார். முதல் பந்தை அஸ்வின் வீச, அதை அடிக்க வருவது போல் வந்த ஜென்னிங்ஸ் அந்த பந்தை அடிக்கவில்லை. உடனே கீப்பிங் செய்துகொண்டிருந்த மற்றொரு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், அஸ்வினை பார்த்து டேய்..டேய்..டேய்.. வேற மாதிரி டா நீ மாமா.. தூக்கிடலாம் தூக்கிடலாம்..போடு என தமிழில் பேசி உற்சாகமூட்டினார்.

அஸ்வின் வீசிய இராண்டாவது பந்தில் ஜென்னிங்ஸ் ஒரு ரன் எடுத்தார். அதே ஓவரில் அஸ்வின் வீசிய மூன்றாவது பந்தை ரூட் எதிர்கொண்டார். அப்போது அந்த பந்தை ரூட் தடுத்து விளையாடினார். அப்போது மீண்டும் ’நல்லாருக்கு அஷ்வின்.. நல்லாருக்கு அஷ்வின். போடு மாமா.. போடு மாமா.. அடுத்த மூனையும்.. அப்படியே போடு.. என்ன பண்ணுறான்னு பார்க்கலாம் மாமா’ என தினேஷ் கார்த்திக் தமிழில் பேசி உற்சாக மூட்டிய வீடியோ தற்போது சமூகவளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தினேஷ் கார்த்திக் மைதானத்தில் தமிழில் பேசுவது இது முதல் முறை அல்ல. இதேபோல் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரிலும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் சங்கர் ஆகியோருடன் தமிழில் பேசிய வீடியோ வைரலாக பரவியது. தொடர் முடிந்து சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழில் பேசிக்கொள்வது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, பேட்ஸ்மேனை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழில் பேசவில்லை. வாஷிங்டன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோருடன் தமிழ் பேசியே பழகிவிட்டேன். அவர்களுடன் ஆங்கிலத்தில் பேசினால் தான் வித்தியாசமாக இருக்கும். தமிழில் பேசுவது சாதரணமாக இருக்கும். மேலும் பேட்ஸ்மேனுக்கு புரியக்கூடாது என்ற தந்திரம் எல்லாம் கிடையாது என விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close