[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு
  • BREAKING-NEWS சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
  • BREAKING-NEWS பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்

’திஸ் இஸ் மை கேட்ச்’: கத்தினார் கோலி, அப்செட் ஆனார் ரஹானே!

this-is-my-catch-angry-virat-shouted

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேட்சை கோட்டை விட்டதால் கடுப்பான விராத் கோலி, கோபமாகக் கத்தினார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பர்மிங்ஹா மில் நேற்று தொடங்கியது. இது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆயிரமாவது டெஸ்ட் போட்டி.

இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு, கே.எல் ராகுல் சேர்க்கப்பட்டார். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், ஒரே ஒரு சுழற் பந்து வீச்சாளராக அனுபவ வீரர் அஸ்வின் மட்டும் ஆடும் லெவனில் இடம் பெற்றார். டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், முதலில் பேட்டிங்கை தேர்தெடுத்தார். அதன்படி அந்த அணியின் அலைஸ்டர் குக்கும், ஜென்னிங்சும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய அவர்கள், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் அடித்து ஆடினர்.

ஆட்டத்தின் ஆறாவது ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ஜென்னிங்ஸ் ஸ்லிப் திசையில் அடித்தார். அது ஸ்லிப்பில் நின்ற விராத் கோலியின் கைகளைத் தேடி சென்றது. ஆனால் அவர் அருகில் இருந்த ரஹானே, ஓவர் ஆர்வக் கோளாறில் டைவ் அடித்து அதைப் பிடிக்க முயன்றார். ஆனால், கேட்ச் டிராப்!. நல்ல கேட்ச் வீணாக்கப்பட்டதால் கடுப்பான விராத், ‘திஸ் இஸ் மை கேட்ச்’ என்று கத்தினார். அவர் கத்தியது, ஸ்டெம்ப் மைக்கில் இருந்து தெளிவாகக் கேட்டது.


பின்னர் உமேஷ் யாதவ் பந்துவீச்சு எடுபடாததால், சுழல்பந்துவீச்சாளர் அஸ்வினை அழைத்தார் விராத். அவரை அழைத்தது சரிதான் என்பது போல, 8.5 வது ஓவரில், தொடக்க ஆட்டக்காரர் அலைஸ்டர் குக்கை போல்டாக்கினார் அஸ்வின். குக் 13 ரன்கள் எடுத்திருந்தார். முதல் விக் கெட்டை அஸ்வின் வீழ்த்தி அசத்தினார்.

அடுத்து கேப்டன் ஜோ ரூட் இறங்கினார். அவரும், ஜென்னிங்சும் இந்திய பந்து வீச்சை எதிர்கொண்டு ரன்களை சேகரித்தனர். நேற்றை ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி, 285 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் முகமது ஷமி 2 விக்கெட்டையும் இஷாந்த், உமேஷ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close