[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

“திடீரென அந்த மாற்றத்தால் பேட்டிங் கடினமாக மாறும்” - தினேஷ் சுவாரஸ்யம்

indvseng-test-series-dinesh-karthi-said-about-test

இங்கிலாந்து அணியுடன் விளையாடவுள்ள டெஸ்ட் தொடர் பதட்டத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக தினேஷ் கார்த்தி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இங்கிலாந்து அணி. இதனால் அடுத்து நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடர் வரும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1) தொடங்குகிறது.

இந்தத் தொடரையொட்டி கடந்த 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 3 நாள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இந்திய அணி விளையாடியது. எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக இந்திய அணி மோதிய இந்தப் போட்டி சமனில் முடிந்தது. இதில் இந்திய அணியின் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்தி, முதல் இன்னிங்ஸில் 82 (95) ரன்கள் குவித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் களமிறங்குவதற்கு முன்னதாக ஆட்டம் சமனில் முடிந்துவிட்டது. இந்தப் பேட்டிங்கால் தினேஷ் கார்த்திக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. தோனியின் ஓய்வுக்குப் பிறகு, கீப்பர் இடத்திற்கு சரியான வீரர் பொறுந்ததாத நிலையில், அதை தினேஷ் பூர்த்தி செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது தொடர்பாக பேசியுள்ள தினேஷ் கார்த்தி, “டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவுள்ள சற்று பதட்டமாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது. நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நினைக்கிறேன். அத்துடன் ஒரு சிறந்த அணியில் விளையாடவுள்ளேன். நீண்ட இடைவேளைக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால் தான் இந்தச் சிறிய பதட்டம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து போன்ற சவாலான அணியுடன் விளையாடுவது எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. என்னுடைய வாழ்நாளில் இதை ஒரு முக்கிய ஆட்டமாக கருதுகிறேன்” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “இந்தத் தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகளுமே கடினமானதாக இருக்கும். இரு அணிகளும் சம பலத்துடன் இருக்கின்றன. இதில் நிறைய வாதங்கள், முறுக்கல்கள், ஆவேசங்கள் இருக்குலாம். ஆனால் அனைத்தும் நல்ல விளையாட்டு எண்ணத்துடன் மட்டுமே இருக்கும். மேட்ச் ஆரம்பித்து 30 அல்லது 45 நிமிடங்கள் வரை பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாட சாதகமாக உள்ளது. பிறகு திடீரென பிட்ச் காய்ந்து, பேட்டிங் செய்ய கடினமாக மாறுகிறது. 2007ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் விளையாடியபோது, இங்கிலாந்தை வென்ற அனுபவம் மறக்க முடியாதது” என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close