[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்
  • BREAKING-NEWS பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்

சர்வதேச கிரிக்கெட்டில் இது அதிகம்: அப்ரிடியை முந்துகிறார் கிறிஸ் கெய்ல்!

chris-gayle-equals-shahid-afridi-s-record-of-most-sixes-in-international-cricket

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர் அடித்துள்ள ஷாகித் அப்ரிதியின் சாதனையை கிறிஸ் கெய்ல் சமன் செய்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல். ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல்ஸ் அணிக்கு விளையாடிய இவர், இந்த வருடம் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தொடரில் இவர் பல சாதனைகளை வைத்துள்ளார்.

இந்நிலையில் பங்களாதேஷ் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த பங்களாதேஷ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூன்றாவது போட்டி நேற்று முன் தினம் நடந்தது. இதில் கிறிஸ் கெய்ல் 66 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இதில் ஐந்து சிக்சர்களும் அடங்கும். 

அந்த சிக்சர்ஸ்கள் மூலம் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் (476) அடித்த ஷாகித் அப்ரிடியின் சாதனையை சமன் செய்தார். பங்களாதேஷ் அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் மோதும்  டி20 போட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடக்கிறது. இந்தப் போட்டியில் கிறிஸ் கெய்ல் மேலும் சில சிக்சர்களை விளாசினால் ஷாகித் அப்ரிடியின் சாதனையை முறியடித்து முன்னேறி செல்வார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close